Dhirubhai Ambani Memorial  Twitter
இந்தியா

Ambani : தந்தை வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்றிய முகேஷ் அம்பானி - மதிப்பு என்ன தெரியுமா?

பசுமையான தோட்டங்களுடன், அமைக்கப்பட்டுள்ள இந்த வீடு பாரம்பரிய குஜராத்தி கட்டிடக்கலைக்கு ஒரு அழகான எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. இந்த வீடு முகேஷ் அம்பானியின் தாத்தாவால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.

Priyadharshini R

பக்கிங்ஹாம் அரண்மனைக்குப் பிறகு உலகின் மிக விலையுயர்ந்த வீடு மும்பையில் உள்ள அன்டிலா என்றாலும், அம்பானி குடும்பத்திற்கு, குஜராத்தில் உள்ள அவர்களின் மூதாதையர் வீடு ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த வீடு 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்ட அந்த வீடு இப்போது நினைவிடமாக உள்ளது.

அம்பானி குடும்பத்திற்கு சொந்தமான பல ஆடம்பரமான வீடுகள் இருந்தபோதிலும், குஜராத்தின் சோர்வாட் என்ற சிறிய கிராமத்தில் உள்ள இந்த வீடு ஒரு ஸ்பெஷலான இடத்தைப் பிடித்துள்ளது.

Mukesh Ambani

முகேஷ் அம்பானி தனது தந்தை வாழ்ந்த அந்த வீட்டை மறுசீரமைப்பு செய்து நினைவிடமாக மாற்றியுள்ளார். பசுமையான தோட்டங்களுடன், அமைக்கப்பட்டுள்ள இந்த வீடு பாரம்பரிய குஜராத்தி கட்டிடக்கலைக்கு ஒரு அழகான எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.

இந்த வீடு முகேஷ் அம்பானியின் தாத்தாவால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மாளிகை குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள சோர்வாட் என்ற கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ளது.

இது 100 ஆண்டுகளுக்கும் பழமையானதாக இருந்ததால் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. இந்த வீட்டின் கட்டிடக்கலை, பாரம்பரிய சாயலுடன் நவீன வசதிக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது. அந்த வீடு இப்போது ‘திருபாய் அம்பானி மெமோரியல் ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் நினைவிடமாக உள்ளது.

இந்த நினைவிடத்தை சாமானிய மக்களும் நேரில் சென்று பார்க்க முடியும் வகையில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.

திருபாய் அம்பானி மெமோரியல் ஹவுஸ் 1.2 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதி குடும்பத்திற்காகவும், மற்றொன்று பொதுமக்கள் பார்வையிடுவதற்காகவும் திறக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் இருக்கும் இந்த நினைவிடத்தை வாரத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரையில் சென்று பார்வையிட முடியும். சமீபத்தில் இந்த நினைவிடத்தில் Dhirubhai Ambani Foundation சில முக்கிய மேம்பாடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?