177 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவில் ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பொதுவான மற்றும் சிக்கனமான போக்குவரத்து வழிமுறையாகும்.
தினசரி, இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் ‘எகானமி மீல்ஸை’ ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக பட்ஜெட்டில் பயணிப்பவர்களுக்கு இந்த 'எகானமி மீல்ஸை' அறிமுகப்படுத்தும் முடிவை இந்தியன் ரயில்வே நோக்கமாக கொண்டுள்ளது.
முதற்கட்டமாக 100 ரயில்வே நிலையங்களின் உணவு கவுண்டர்களில் இந்த சேவை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயணிகள் இப்போது இந்த கவுன்டர்களில் கிடைக்கும் இரண்டு உணவு விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம். 20 ரூபாய் விலையுள்ள 'எகானமி மீல்ஸ்' மற்றும் INR 50 விலையில் 'ஸ்நாக் மீல்ஸ்' என இரண்டு வசதிகளை வழங்குகிறது.
ஹைதராபாத், விஜயவாடா, ரேணிகுண்டா, குண்டகல், திருப்பதி, ராஜமுந்திரி, விகாராபாத், பகாலா, தோனே, நந்தியால், பூர்ணா மற்றும் அவுரங்காபாத் உள்ளிட்ட தென் மத்திய ரயில்வே வழித்தடங்களில் இந்த உணவு கவுண்டர்கள் அமைக்கப்பட்டவுள்ளது.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews