பணக்கார முதல்வர்கள்: 500 கோடி சொத்துகளுடன் ஆந்திர முதல்வர் முதலிடம்- MK Stalin இடம் என்ன? Twitter
இந்தியா

பணக்கார முதல்வர்கள்: 500 கோடி சொத்துகளுடன் ஆந்திர முதல்வர் முதலிடம்- MK Stalin இடம் என்ன?

Antony Ajay R

இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் சொத்துப்பட்டியல் வெளியிடப்பட்டு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த பட்டியலில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முதலிடத்தைப் பிடித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடைசி இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவிலிருக்கும் 30 முதலமைச்சர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலிடத்தில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி 510 கோடி சொத்து வைத்திருக்கிறார். கோடீஸ்வரராக இல்லாத அந்த ஒரே முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

இந்த பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் இடம் என்ன? பிற முதல்வர்களின் சொத்துமதிப்பு என்னவாக இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்...

அதிக சொத்துகள் இருக்கிற பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் அருணாச்சல பிரதேச முதல்வர் பிரேம கந்து. இவரது சொத்து மதிப்பு 163 கோடிக்கும் மேல்.

மூன்றாவது இடத்தில் ஒடிஷா முதல்வர் நவீட் பட்நாயக் இருக்கிறார். இவரது சொத்துமதிப்பு 63 கோடி.

இதேப்போல குறைவான சொத்து உள்ள முதல்வர்களாக மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி முதல்வர், ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் இடம் பிடித்துள்ளனர்.

புதுச்சேரி முதல்வர் 38 கோடி மதிப்புடைய சொத்துகளுடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். மொத்தமாக 11 முதல்வர்கள் 20 கோடிக்கும் அதிகமாக சொத்துகள் வைத்துள்ளனர்.

5 - 10 கோடிக்கு இடையில் 8 முதல்வர் இடம் பெற்றிருக்கின்றனர். இதில் 8 கோடிக்கும் அதிகமான சொத்துமதிப்புடன் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்.

பணக்கார முதல்வர்கள் பட்டியலில் 14வது இடத்தைப் பிடித்திருக்கிறார் தமிழக முதல்வர்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஜார்கண்ட் முதல்வர் ஹெமட் சொரேன், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோரும் 8 கோடிக்கு அதிகமாக சொத்துகள் வைத்துள்ளனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் முறையே 3 கோடிக்கு அதிகமான சொத்துகள் வைத்துள்ளனர்.

உத்திரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் 1 கோடிக்கும் அதிகமாக சொத்துகள் வைத்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?