Jammu and Kashmir: சத்பல் டு வெரினக்- சம்மர் ட்ரிப்பில் இந்த 6 இடங்களை மிஸ் செய்யாதீர்கள்! Twitter
இந்தியா

Jammu and Kashmir: சாத்பல் டு வெரினக்- சம்மர் ட்ரிப்பில் இந்த 6 இடங்களை மிஸ் செய்யாதீர்கள்

பனியால் மூடப்பட்ட மலைகள், புல்வெளிகள், ஏரிகளெல்லாம் கோடைக்காலத்தில் ஜொலிக்கும். ஆண்டு முழுவது சுற்றுலாப்பயணிகள் குவியும் ஜம்மு, ஒவ்வொரு பருவத்துக்கும் ஒருவிதமான உணர்வை வழங்கும்.

Antony Ajay R

ஜம்மு காஷ்மீர், இந்தியாவில் பல அழகிய இடங்கள் இருக்கும் பகுதியாகும். எல்லா ட்ராவலர்களும் நிச்சயமாக சென்று பார்க்க விரும்பும் இடமாகவும் இருக்கிறது.

இங்கிருக்கும் பனியால் மூடப்பட்ட மலைகள், புல்வெளிகள்,  ஏரிகளெல்லாம் கோடைக்காலத்தில் ஜொலிக்கும். ஜம்முவை குளிர்காலத்திலும் கூட பார்க்கலாம், ஒவ்வொரு பருவத்துக்கும் ஒருவிதமான உணர்வை வழங்கும் நிலப்பரப்பு ஜம்மு காஷ்மீர். 

ஜம்மு காஷ்மீர் செல்லும் போது நாம் மிஸ் செய்துவிடக் கூடாத 6 இடங்களைப் பார்க்கலாம். 

சாத்பல் ( Chatpal )

சாத்பல் ( Chatpal )

தெற்கு காஷ்மீரின் ஷங்கஸ் மாவட்டத்தில் உள்ள சாத்பலில் அழகிய ஏரிகள், மலைகள், பச்சை நிறைந்த இடங்கள் காட்டுப்பூக்கள் நிறைந்த புல்வெளிகள் இருக்கின்றன. 

உங்களின் எரிச்சலான சத்தம் நிறைந்த நகர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சலசலக்கும் நீரோடைகள் மற்றும் பறவைகளின் சத்தத்தை மட்டும் கேட்டபடி இங்கு ஓய்வெடுக்கலாம்.

டக்சம் ( Daksum )

டக்சம் ( Daksum )

ஊசியிலையுள்ள காடுகள், நீரோடைகள் மற்றும் புல்வெளிகள் நிறைந்த இந்த பகுதி மலையேற்றம் செய்பவர்களுக்கு சொர்க்கம். 

 இங்குள்ள காடுகளில் சில அரியவகை விலங்கினங்களைப் பார்க்கலாம். 

வார்வன் பள்ளத்தாக்கு ( Warwan Valley )

வார்வன் பள்ளத்தாக்கு, லடாக் இமயமலையை சுரு பள்ளத்தாக்கிலிருந்து காஷ்மீர் இமயமலை வரை இணைக்கிறது. இதனை சால் ரூட் என்றும் அழைக்கின்றனர். 

இங்குள்ள நீர்வீழ்ச்சிகள் நிச்சயமாக அனைவரையும் ஈர்க்கும். குளிர்ந்த காற்றும், தெளிவான வானமும் நமக்கும் கனவுலகில் இருக்கும் உணர்வைக் கொடுத்துவிடுமாம். 

இங்கு ட்ரெக்கிங் செய்வது பலருக்கும் விருப்பமான ஒன்றாக இருக்கும்.

கர்னா ( Karnah )

இந்த கிராமத்துக்கு கர்னவ் என்ற பெயரும் உண்டு. பல அரசர்கள் இங்கு ஆட்சி செய்திருக்கின்றனர். அரசர்களின் சொர்க்கபுரியாக இந்த இடம் இருந்திருக்கிறது. இது இந்தியா பாகிஸ்தான் இடையில் லைன் ஆஃப் கண்ட்ரோல் பகுதியில் உள்ளது. வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கூட முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

வெரினக் ( Verinag )

கோத்தர் மாவட்டத்தில் அமைந்துள்ள பெரிய நீரூற்றாகும். பனிஹாலில் உள்ள ஜவஹர் சுரங்கப்பாதை வழியாக காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குள் நுழையும் போது இயற்கை எழில் கொஞ்சும் ஒரு தளமாக வெரினக் இருக்கிறது.

கோகெர்னாக் ( Kokernag )

அனந்த்நாக் மாவட்டத்தில் கோகெர்னாக் நகரம் உள்ளது. கோகெர்-னாக் என்றால் கோழி-பாம்பு என்று அர்த்தமாம்.  இங்குள்ள அடர்ந்த காடுகளில் இருந்து நீரூற்றுகள் நெளிந்து வளைந்து வருவதாலும் அது கோழின் கால்கள் போல பிரிவதாலும் இந்தப் பெயர். இந்த நகரம் கடல்மட்டத்தில் இருந்து 2000 அடி உயரத்தில் இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?