Janjira Fort: இந்தியாவின் வீழ்த்தப்படாத கோட்டை பற்றி தெரியுமா? ட்விட்டர்
இந்தியா

Janjira Fort: இந்தியாவின் இந்த வீழ்த்தப்படாத கோட்டை பற்றி தெரியுமா?

ஏன், இந்தியாவின் மாமன்னனாக திகழ்ந்த சத்ரபதி சிவாஜி கூட 13 முறை இக்கோட்டையை வெல்ல முயற்சித்தார். ஆனால், 13 முறையும் தோற்றே போனார். அவருக்கு பின்னர் அவரது மகன் சம்பாஜியும் ஜஞ்சிரா கோட்டையை கைப்பற்ற முயற்சித்து அவரும் தோற்று போனார்!

Keerthanaa R

மகாராஷ்டிராவின் அகமத்நகரில் அமைந்திருக்கிறது ஜஞ்சிரா கோட்டை. நூற்றாண்டுகள் பழமையான இக்கோட்டை எந்த மன்னராலும், வீழ்த்தப்படாத, கைப்பற்றப்படாத கோட்டை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

மன்னர்கள் அவர்கள் ஆண்ட காலத்தில், தங்கள் ஆட்சியை விரிவுபடுத்த மற்ற நாடுகளுக்கு, குறிப்பாக சிற்றரசுகளுக்கு படையெடுத்து செல்வது வழக்கம்.

அப்படி எந்த படையெடுப்புக்கும் அசையவில்லை இந்த கோட்டை.

ஏன், இந்தியாவின் மாமன்னனாக திகழ்ந்த சத்ரபதி சிவாஜி கூட 13 முறை இக்கோட்டையை வெல்ல முயற்சித்தார். ஆனால், 13 முறையும் தோற்றே போனார். அவருக்கு பின்னர் அவரது மகன் சம்பாஜியும் ஜஞ்சிரா கோட்டையை கைப்பற்ற முயற்சித்து அவரும் தோற்று போனார்!

வழக்கத்துக்கு மாறான, மற்றும் அதன் பிரம்மாண்ட கட்டமைப்புக்காக அறியப்படும் இந்த ஜஞ்சிரா கோட்டையானது மாலிக் அக்பர் என்பவரால் கட்டப்பட்டது. 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டை மகாராஷ்டிராவின் கடற்கரை நகரமான முருத் அருகே அரபிக்கடலில் உள்ள ஒரு தீவில் அமைக்கப்பட்டுள்ளது.

பழங்காலத்து கட்டிடக்கலைக்கு சான்றாக திகழும் இந்த ஜஞ்சிரா கோட்டை, இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்று.

வழக்கமாக சதுரமாகவோ, நீளமாகவோ கட்டப்படும் கோட்டைகளை போல அல்லாமல், இது நீள்வட்ட வடிவில் (Oval) கட்டப்பட்டிருக்கும்.

40 அடி உயரமுள்ள இங்கு மொத்தம் 19 ஆர்ச்சுகள் (வட்ட வளைவுகள்) உள்ளன. இந்த வளைவுகள் ஒவ்வொன்றுக்குள்ளும் பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

அவற்றில் கட்லால் பங்காரி என்ற பீரங்கி மிகவும் பிரபலம். எதிரி படையெடுப்பில் இருந்து கோட்டையை காக்க இந்த பீரங்கிகள் உதவின.

மன்னர் சிவாஜிக்கு பின்னர் அவரது மகனும் இக்கோட்டை மீது படையெடுத்தார் அல்லவா? அவரும் தோற்றுதானே போனார்?

இதனை தொட்ரந்து, சம்பாஜி விரிகுடாவின் குறுக்கே கன்சா என்று அழைக்கப்படும் மற்றொரு கோட்டையைக் கட்டினார். இதற்காக பூமியின் பெரும்பகுதியை பயன்படுத்தி, சுரங்கம் ஒன்றை அமைத்தார்.

எதிர்காலத்தில் ஜஞ்சிரா கோட்டை மீது தாக்குதல் நடத்த இது தளமாக அமையும் என நம்பினார் சம்பாஜி. 22 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கன்சா கோட்டையை கட்ட 22 ஆண்டுகள் ஆனது.

கடற்கரை கோட்டையான இங்கு செல்ல நாம் படகை தான் பயன்படுத்த முடியும்.

இங்கு சிதைந்த மசூதி, அரண்மனை, ஒரு பெரிய நீச்சல் குளம் இருக்கிறது. இந்த குளத்திற்கு அருகிலிருக்கும் நீரோடைகளில் இருந்து தண்ணீர் நிரப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இங்கு ஒரு கிணரும் இருக்கிறது. இதன் தண்ணீர் மிக இனிமையான சுவைக் கொண்டதாக இருக்கும். இங்கு ஜஞ்சிரா குகைகள் உள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?