ABVP - JNUSU twitter
இந்தியா

JNU violence: அசைவ உணவால் எழுந்த கலவரம்; ABVP - JNUSU மாணவர்களிடையே மோதல் - என்ன நடந்தது?

Antony Ajay R

நேற்று இரவில் ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் வலது சாரி மற்றும் இடது சாரி மாணவர்கள் கும்பல்களாகத் தாக்கிக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜே.என்.யு காவேரி விடுதியில் அசைவ உணவு பரிமாறப்பட்டதால் அகில பரத வித்யார்த்தி பிரசாத் மாணவர்கள் தங்களைத் தாக்கியதாக ஜே.என்.யூ.மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த ராம நவமி பூஜையை இடது சாரி மாணவர்கள் குறுக்கிட்டுத் தடுத்ததே சர்ச்சைக்குக் காரணம் என்கின்றனர் ஏபிவிபி மாணவர்கள்.

ஹிஜாப், ஹலால் என நாடு முழுவதும் தொடரும் இந்து - முஸ்லீம் பிரச்னைகளின் தொடர்ச்சியாகவே JNU -வில் சர்ச்சை எழுந்திருக்கிறது. கலவரம் தொடங்குவதற்கு முன்பிருந்தே அங்குப் பதட்டமான சூழல் இருந்திருக்கிறது.

தாக்கப்பட்ட பெண்

நடைபெற்ற கலவரத்தில் 6 மாணவர்கள் காயமடைந்ததாக காவல்துறையினரும், 5-20 மாணவர்கள் காயமடைந்ததாக ஏபிவிபி அமைப்பினரும், 50 மாணவர்களுக்கு மேல் காயமடைந்துள்ளதாக இடதுசாரி மாணவர்களும் கூறுகின்றனர்.


இரண்டு தரப்பு மாணவர்களும் கற்களைக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கியிருக்கின்றனர். தாக்குதலுக்கு ஆளான மாணவர்கள் இரத்தத்துடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. நடைபெற்ற தாக்குதலுக்கு இரண்டு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தாக்குதலுக்குப் பின்னர் இருதரப்பு மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் 323, 341, 509, 506, மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகத் தெரிவிக்கும் காவல் துறையினர், “`போராட்டம் நடத்து முடிந்துவிட்டது. இப்போதைக்கு வன்முறை ஏதுமில்லை. இருப்பினும் மாணவர்களிடையே அமைதிக்காக நாங்கள் முயன்று வருகிறோம்” எனக் கூறினர்.

JNU மாணவர் அமைப்பினர், “ஜே.என்.யு மற்றும் அதன் உணவகங்கள் என்பவை அனைவருக்குமானது. இது குறிப்பிட்ட பிரிவினருக்கு என்று ஒன்றுமில்லை. ஜே.என்.யு மாணவர்களிடையே குழப்பத்தை உண்டாக்கவே இதுபோன்ற கோமாளித்தனமான நடவடிக்கைகளை ஏ.பி.வி.பி அமைப்பினர் செய்கின்றனர்" என்கின்றனர்.

தங்கள் மீதான ஐந்து குற்றச்சாட்டை ஏற்க மறுத்த ஏ.பி.வி.பி அமைப்பினர், ``ராமநவமியில் சிறப்புப் பூஜை ஒன்றைக் காவேரி விடுதியில் மாணவர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் பல இடதுசாரிகள் வேண்டுமென்றே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூஜையைத் தடுத்தனர்” எனக் கூறினார்.

வார இறுதி நாட்களில் அசைவம் சமைப்பது வழக்கம் ஏபிவிபி மாணவர்கள் அதில் குறுக்கிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டதாக JNU மாணவர்கள் கூறுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?