Kaas Plateau: மகாராஷ்டிராவின் இந்த 'பூக்களின் பள்ளத்தாக்கு' பற்றி தெரியுமா? twitter
இந்தியா

Kaas Plateau: மகாராஷ்டிராவின் இந்த 'பூக்களின் பள்ளத்தாக்கு' பற்றி தெரியுமா?

பல அரிய, அழிவின் விளிம்பில் இருக்கும் மலர்களை இந்த சமயத்தில் நாம் காஸில் காணமுடிகிறது. சுமார் 850 வகையான மலர்ச் செடிகள் இப்பகுதியில் உள்ளன.

Keerthanaa R

இயற்கை மனிதனின் அறிவாற்றலுக்கு அப்பாற்பட்டது என நம்மை நிதம் நினைக்கவைக்கிறது. இதனை எடுத்துக்காட்டும் பல இடங்கள் இந்தியாவிலும் உள்ளன.

அப்படி அதிக அறியப்படாத இயற்கை அற்புதம் தான் மகாராஷ்டிராவில் உள்ள காஸ் பீடபூமி (Kaas Plateau). நீங்கள் இயற்கை ஆர்வலராக இருந்தால், உங்களின் அடுத்த பிளான் இங்கு செல்வதாய் இருக்கட்டும்.

இதனை மகாராஷ்டிராவின், பூக்களின் பள்ளத்தாக்கு என்று அழைக்கின்றனர். இந்த காஸ் பிளாட்யூ பற்றி பார்க்கலாம்

மும்பையில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த காஸ் பீடபூமி. இந்த இடம் பருவமழை காலத்தில் சென்று பார்க்க சிறந்த தேர்வாக இருக்கும்.

காரணம், பருவமழை காலத்தில் இங்கு பூக்கும் மலர்களின் அழகு, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத காட்சியாக அமைகிறது.

பல அரிய, அழிவின் விளிம்பில் இருக்கும் மலர்களை இந்த சமயத்தில் நாம் காஸில் காணமுடிகிறது. சுமார் 850 வகையான மலர்ச் செடிகள் இப்பகுதியில் உள்ளன.

இந்த பூக்களின் பன்முகத்தன்மை முழு பீடபூமியையும் ஊதா, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற நிழல்களால் நிரப்புகிறது. காஸ் பீடபூமி மகாராஷ்டிராவில் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும்.

இதன் காரணமாகவே இது ஒரு பிரபல pre-wedding போட்டோஷூட் தலமாக உள்ளது. இதற்காகவே இங்கு ஒரு தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மலர்களை தவிர பல வகையான உயிரனங்களையும் இங்கு காணலாம். வனவியல் ஆர்வலர்களையும் அதிகம் ஈர்க்கிறது இந்த இடம். மலபார் க்ரெஸ்டட் லார்க் மற்றும் இந்திய ஸ்கிமிட்டர் பாப்லர் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களை இங்கு காணலாம். தவிர, பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகளும் இங்கு வலம் வருகின்றன.

இயற்கை மனிதனுக்கு குரங்கு கையில் கிடைத்த பூமாலை கணக்காய் தான் இருக்கிறது.

இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், பூக்களை கிள்ளுவது, அல்லது புகைப்படம் எடுக்கும்போது சேதங்கள் ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் இருந்தன.

இதனால் உள்ளூர் அதிகாரிகள் சில விதிமுறைகளை அமல்படுத்தினர். பூக்களை தீண்டினால் அபராதம், செல்பி எடுக்க தனி இடம் ஒதுக்கப்பட்டது.

மும்பை சென்றால் நிச்சயம் இந்த இடத்திற்கு சென்று வாருங்கள், இயற்கையை புண்படுத்தாமல்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?