Kangana Ranaut Twitter
இந்தியா

கத்தார் விவகாரம் : சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்படும் கங்கனா ரனாவத் - என்ன நடந்தது?

NewsSense Editorial Team

"இந்த முட்டாள் ஒரு ஏழையை அவமானப்படுத்துவது குறித்து வெட்கப்படவில்லை. உலகில் அவனுடைய முக்கியத்துவத்தையும் இடத்தையும் கேலிக்கு உட்படுத்துகிறான்.

வாசுதேவ் உன்னைப் போன்ற பணக்காரனுக்கு ஏழையாகவும் சிறியவராகவும் இருக்கலாம். அவருடைய வருத்தம், வேதனை, ஏமாற்றம் எதுவாக இருந்தாலும் அதை வெளிப்படுத்த அவருக்கு உரிமை உண்டு.

இந்த உலகத்திற்கு அப்பால் நாம் அனைவரும் சமமாக இருக்கும் ஒரு உலகம் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு, சிறிது நேரத்தில் அதனை டெலிட் செய்திருக்கிறார்.

Kangana Ranaut Insta Story

மேலும் தன்னுடைய அடுத்த ஸ்டோரியில், "ஒரு ஏழையை கேலி செய்ததற்காக இந்த கொடுமைக்காரனை உற்சாகப்படுத்தும் அனைத்து இந்தியர்களும், இந்த அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் நீங்கள் அனைவரும் ஒரு பெரிய 'போஜ்' (சுமை) என்பதை நினைவில் கொள்ளுங்கள்." என்று கத்தார் ஏர்வேய்ஸ் சீஇஓ-வின் ஸ்பூஃப் வீடியோவுக்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் தாக்கி இருக்கிறார்.

ஆனால், அவரின் அந்த பதிவுகள் டிவிட்டர் சமூக வலைதளத்தில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. கத்தார் ஏர்வேய்ஸ் தலைமை அதிகாரியின் ஸ்பூஃப் வீடியோவை உண்மை என்று நம்பி கங்கனா திட்டி வைத்த ஸ்கிரீன்ஷாட்டை எடுத்துப்போட்டு நெட்டிசன்கள் கங்கனாவை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில், கங்கனா ரனாவத், பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு எதிரான கொலை மிரட்டல்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதில், "நுபுர் கருத்துகளைத் தொடர்ந்து, எல்லா வகையான அச்சுறுத்தல்களும் அவரை குறிவைத்து வருவதை நான் காண்கிறேன். இந்துக் கடவுள்கள் அவமதிக்கப்படும்போது, நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்கிறோம். தயவுசெய்து அதைச் செய்யுங்கள், நீங்களே டான்களாக விளையாடத் தேவையில்லை...(sic)" என்று கூறியிருந்தார்.

மேலும், "இது ஆப்கானிஸ்தான் அல்ல. ஜனநாயகம் எனப்படும் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் எங்களிடம் உள்ளது. அந்த உண்மையை மறந்துவிடுபவர்களுக்கு ஒரு நினைவூட்டல்," என்று கூறினார்.

நுபுர் சர்மா

நபிகள் குறித்த அவதூறு கருத்திற்குப் பிறகு, தனக்கு அச்சுறுத்தல்கள் வருவதாகவும், தான் கருத்துக்களால் துன்புறுத்தப்படுவதாகவும் நுபுர் ஷர்மா கூறியிருந்தார். அதனால், நுபுர் ஷர்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு டெல்லி காவல்துறை பாதுகாப்பு வழங்கியது. அதற்கு அடுத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, கங்கனா ரணாவத்தின் அறிக்கை வந்துள்ளது.

முன்னதாக முஸ்லீம் குழுக்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் குவைத், கத்தார் மற்றும் ஈரான் போன்ற நாடுகளின் கடுமையான எதிர்வினைகளுக்கு பிறகு, BJP ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ,“ அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும், எந்தவொரு மத ஆளுமையையும் அவமதிப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறது” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நுபுர் ஷர்மா மற்றும் ஜிண்டால் ஆகியோரின் கருத்துக்களை ஒட்டி, அரபு நாடுகளில் இந்திய தயாரிப்புகளைப் புறக்கணிக்க அழைப்பு விடுக்கும் டிவிட்டர் பதிவுகள் ட்ரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?