Kangana Ranaut Twitter
இந்தியா

தேசிய மொழியாக சமஸ்கிருதம் ஏன் இருக்கக் கூடாது..? மீண்டும் சர்ச்சை கிளப்பிய கங்கனா ரனாவத்

கன்னடம், தமிழ், குஜராத்தி, இந்தி போன்ற மொழிகள் அனைத்தும் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்திருக்கலாம். பின்னர் ஏன் நமது நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்கக் கூடாது..? என்று கங்கனா ரனாவத் பேசியது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Priyadharshini R

கடந்த சில நாட்களாக ஹிந்தி மொழியைத் தேசிய மொழியாக்க வேண்டும் என்ற கருத்திற்குச் சிலர் ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் பேசிய சுதீப்“இனி ஒரு போதும் இந்தி நம் தேசிய மொழி இல்லை” எனப் பேசியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் உங்கள் தாய்மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? இனிமேல் நமது தாய்மொழியாகத் தேசிய மொழியாக இந்தி இருக்கும்"எனப் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ட்விட் செய்தார்.

Kangana Ranaut

இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் “தாகத்” திரைப்படத்தின் டிரையலரை வெளியிட்டார். அந்த விழாவில் பேசிய அவர், நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் படி இந்தி தேசிய மொழி தான் என்றும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்தி மொழி நம்முடைய தேசிய மொழி என்று தெரிவித்த கருத்தில் எந்தவித தவறும் இல்லை என்றார்.

மேலும் மொழி வாரியாக வேற்றுமை கொண்டுள்ள இந்தியாவை இணைக்க பொதுவான புள்ளியாக மொழி தேவைப்படுகிறது. இந்தி தேசிய மொழியாக்கப்பட்டது. ஆனால் டெக்னிக்கலாக பார்த்தால் இந்தியை விடத் தமிழ் பழமையானது. ஆனால் சமஸ்கிருதம் அதனைக் காட்டிலும் தொன்மையானது.

கன்னடம், தமிழ், குஜராத்தி, இந்தி போன்ற மொழிகள் அனைத்தும் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்திருக்கலாம். பின்னர் ஏன் நமது நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்கக் கூடாது..? என்று கங்கனா ரனாவத் பேசியது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?