பழமையான இந்து சமய கலைப்பொருட்கள் கண்டுபிடிப்பு - எங்கே? Twitter
இந்தியா

பழமையான இந்து சமய கலைப்பொருட்கள் கண்டுபிடிப்பு - எங்கே?

சமீபத்தில் அயோத்தி ராமர் கோயில் நிறுவப்பட்டுள்ள நிலையில் தற்போது கிடைத்துள்ள விஷ்ணு சிலை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

Priyadharshini R

கிருஷ்ணா நதிக்கரையில் பல நூற்றாண்டுகள் பழமையான இந்து சமய கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மற்றும் கர்நாடகா எல்லைக்கு அருகில் உள்ள ராய்ச்சூரில் உள்ள கிருஷ்ணா நதிக்கரைக்கு அருகில் பழமையான சிவலிங்கம் மற்றும் விஷ்ணு சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் காலம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்திய தொல்லியல் துறை, வரலாற்று மதிப்பு மிக்க தொல்லியல் பொருட்களை மீட்டு வருகின்றது.

சமீபத்தில் அயோத்தி ராமர் கோயில் நிறுவப்பட்டுள்ள நிலையில் தற்போது கிடைத்துள்ள விஷ்ணு சிலை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்து புராணங்களின்படி, கிருஷ்ணா நதியானது மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று நம்பப்படுகிறது.

இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றாகப் போற்றப்படும் கிருஷ்ணா நதி கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு நிகரானதாக உள்ளது.

கிருஷ்ணா நதியில் நீராடினால் ஒரு மனிதனின் ,கடந்தகால பாவங்கள் மற்றும் வினைகளை சுத்தப்படுத்த முடியும் என்று புராண நூல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கிருஷ்ணர் தனது இளமைகாலம் மற்றும் முதுமை காலத்தை கிருஷ்ண நதியில் செலவிட்டதாக கூறப்படுகிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், கிருஷ்ணா நதியானது வேதகாலம் மற்றும் சாதவாகன, விஜயநகர மற்றும் காகதீய பேரரசுகள் உட்பட பல பண்டைய நாகரிகங்களின் தாயகமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?