Hijab issue Twitter
இந்தியா

கர்நாடகா: மாணவிகள் ஹிஜாப் அணிய இருந்த தடை நீக்கம் - முதலமைச்சர் உத்தரவு

Antony Ajay R

கடந்த 2022ம் ஆண்டு பாஜக ஆட்சிகாலத்தின் போது கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என விதி அமல்படுத்தப்பட்டது.

இந்த விதியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது, நீதிமன்றமும் ஹிஜாப் அணிவதற்காக தடையை ஏற்றுக்கொண்டது.

ஹிஜாப் தொடர்பான சட்டம் அங்கு கலவரமாக உருவெடுத்தது. கல்வி நிலையங்களில் ஏபிவிபி மற்றும் பிற மாணவர் அமைப்புகளுக்கு இடையே மோதல் வெடித்தது,

அடுத்ததாக வந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றிபெற்றது. சித்தராமையா முதலமைச்சராக பதாவியேற்றார்.

நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய சித்தராமையா. "ஹிஜாப் தடையை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டிருக்கிறோம். உடை மற்றும் உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. அதை ஏன் எதிர்க்க வேண்டும்? அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? வாக்குகளைப் பெறுவதற்காக இவற்றில் அரசியல் செய்யக்கூடாது

உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ உடுத்துங்கள்; என்ன பிடிக்கிறதோ சாப்பிடுங்கள்! என் விருப்பம் என் தேர்வு; உங்கள் விருப்பம் உங்கள் தேர்வு. நான் வேஷ்டியும் குர்தாவும் அணிகிறேன். நீங்கள் பேண்ட் - ஷர்ட் அணிகின்றீர்கள். இதிலென்ன தவறுள்ளது? பாஜக, உணவு - உடை - சாதி போன்றவற்றின்மூலம் மக்களை பிரிக்க நினைக்கிறது. நான் ஹிஜாப் தடையை திரும்பப்பெற உத்தவிட்டுள்ளேன்.” எனப் பேசினார்.

சித்தராமையாவின் நடவடிக்கையை, " “பள்ளி, கல்லூரிகளில் மாணாக்கர் அனைவரும் சமம் என்பதற்காகவே சீருடை கொண்டு வரப்பட்டது. உச்ச நீதிமன்றமும் இதை உறுதி செய்துள்ளது. தற்போது கர்நாடக முதல்வரின் இந்த நடவடிக்கையால், மாணாக்கரின் மனதில் சீருடை தொடர்பான வேறுபாட்டை சித்தராமையா உருவாக்குகிறார்” என விமர்சித்துள்ளது பாஜக.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?