திருமண விருந்துகள் எப்போதும் பார்த்து பார்த்து தயார் செய்யப்படும். மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கும், பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கும் விருந்து ஏற்பாடு செய்கையில் தங்களது கௌரவம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கருத்தாக இருப்பது இயல்புதான்.
திருமண விருந்தும் பரிமாறுதலும் இரு வீட்டாரையும் இணைத்தாலும், விருந்து சரியாக இல்லாததால் கர்நாடகாவில் ஒரு திருமணம் நின்றுள்ளது.
கர்நாடக மாநிலம் சோம்வார்பேட்டையில் மணமகன் வீட்டாருக்கு இனிப்பு வழங்காததால் மணப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என கூறி மோதிரத்தை கழற்றியுள்ளார் மணமகன்.
ஹனகல்லு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும், தும்கூரு நகரைச் சேர்ந்த ஆணுக்கும் மே 5-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண நாளுக்கு முன் மணமகன் தரப்பு இருந்து மணமகளின் குடும்பத்தினரிடம் வரதட்சணை கேட்டது. இதில் மணமகன் வீட்டார் பெங்களூருவில் ஒரு நிலம் கேட்டதாக மணப்பெண் குடும்பத்தினர் கூறினர்.
இது ஒருபுறம் இருக்க திருமண நாளன்று சிறு சலசலப்பு ஏற்பட்டது. மணமகன் வீட்டார் சாப்பாட்டில் இனிப்பு வைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் குடும்பத்தினர்களுடன் தகராறு ஏற்பட்டு பிரச்னை காவல் நிலையம் வரை சென்றது. இந்த திருமணத்தை செய்துக்கொள்ள விரும்பவில்லை என கூறி தனது மோதிரத்தை மணமகன் கழற்றியுள்ளார். இந்த சம்பவத்தால் மனமுடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews