கர்நாடகா : கடலோர காடுகளில் கயாகிங் செல்ல தயாரா? சதுப்பு நிலத்தின் சிறப்புகள் என்ன? Twitter
இந்தியா

கர்நாடகா : கடலோர காடுகளில் கயாகிங் செல்ல தயாரா? சதுப்பு நிலத்தின் சிறப்புகள் என்ன?

கயாக்கிங் செய்ய தயங்குபவர்களுக்காக போட்டிங் வசதியும் கூட உள்ளது. கர்நாடகா கடலோரப்பகுதிகளில் சாலிகிராமா சதுப்புநிலத்தை நோக்கி சுற்றுலாப்பயணிகள் வர கயாக்கிங் மட்டுமே காரணம் இல்லை.

Antony Ajay R

கர்நாடக கடலோர பகுதிகள் மணல்நிறைந்த கடற்கரைகள், வியப்பூட்டும் கோவில்களுக்கு பிரபலமானது. இப்போது சதுப்புநில படகு பயணமும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.

முதன்முதலில் சதுப்புநிலத்தில் கயாக்கிங் செய்யும் ஐடியாவை மிதுன் கோடி மற்றும் அவரது நண்பர் லோகேஷ் கொண்டுவந்தனர். உடுப்பி மாவட்டத்தில் சாலிகிராம என்ற கிராமத்தில் செயல்படுத்த திட்டமிட்டனர்.

சீதா ஆற்றின் உப்பங்கழியில் (Backwaters) வெற்றிகரமாக கயாக்கிங் தொடங்கப்பட்டது. சதுப்புநில காடுகள் வழங்கும் அழகான இயற்கை காட்சிகாளை பார்த்தபடி பயணம் செய்வது பலருக்கும் பிடித்த செயல்பாடாக அமைந்தது.

காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இடைவிடாது பயணிகள் குவிந்தனர். கடலில் அலைகள் அதிகரித்து அதிக தண்ணீர் வரும்போது கயாக்கிங் அற்புதமானதாக அமைகிறது.



கயாக்கிங் செய்ய தயங்குபவர்களுக்காக போட்டிங் வசதியும் கூட உள்ளது. கர்நாடகா கடலோரப்பகுதிகளில் சாலிகிராமா சதுப்புநிலத்தை நோக்கி சுற்றுலாப்பயணிகள் வர கயாக்கிங் மட்டுமே காரணம் இல்லை.

குறிப்பிட்ட சீசனில் இடப்பெயர்வாகும் பறவைகளை இங்கு அளவுக்கு அதிகமாக குவிகின்றன. இவற்றை பார்ப்பதற்காகவும் புகைப்படம் எடுக்கவும் மக்கள் குவிகின்றனர்.

இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் தமிழ், கேராளா போன்ற அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கர்நாடகாவில் பெங்களூரு, மங்களூரு போன்ற நகரங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக விசிட் செய்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?