Karni Mata Temple : Where Rats Are Worshiped  Twitter
இந்தியா

Karni Mata Temple : எலி குடித்த பால் தான் பிரசாதமா? எலி கோவில் குறித்து தெரியுமா?

எலிகள் உண்பதற்கான உணவு மற்றும் பால் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த எலிகள் குடித்த பால் தான் இங்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Priyadharshini R

இந்தியா தனித்துவமான பல்வேறு கலாச்சார இடங்களை கொண்டுள்ளது. அவற்றில் பல நம்மை ஆச்சரியப்படுத்தும், அப்படி சுவாரஸ்யமான இடங்களில் ஒன்று தான் ராஜஸ்தான் தேஷ்நோக்கில் உள்ள கர்னி மாதா கோவில். இது "எலிகளின் கோவில்" என்று பிரபலமாக அறியப்படுகிறது.

ஆயிரக்கணக்கான இந்து யாத்ரீகர்கள் கர்னி மாதாவை வழிபடுகின்றனர். 25,000 கருப்பு எலிகள் அந்த கோவிலில் வசிக்கின்றன.

கர்னி மாதா கோயிலின் வரலாறு

1470 ஆம் ஆண்டில் தேஷ்னோக் நகரம் நிறுவப்பட்ட காலத்தில், கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.

இன்று நாம் காணும் கர்னி மாதா கோயில் 20ஆம் நூற்றாண்டில் மகாராஜா கங்கா சிங் என்பவரால் கட்டப்பட்டது.

தாஜ்மஹாலைப் போன்ற முகலாய கட்டிடக்கலையின் அடிப்படையில் அவர் உருவாக்கினார்.

ஆனால், காலப்போக்கில் இந்த கட்டமைப்புகள் சீர்குலைந்தன.

1999 ஆம் ஆண்டு கர்னி குந்தன்லால் வர்மாவால் கோயில் மேலும் மேம்படுத்தப்பட்டது.

கர்ணி மாதா கோவிலின் புராண கதை

13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் சித்தருக்காக இந்த கோயில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் துர்க்கையின் அவதாரம் என்று நம்பப்படுகிறது.

கடவுள் பக்தி அதிகமுள்ள கர்ணி மாதா அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று அங்கேயே தவத்தில் மூழ்கிவிடுவது வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஒருமுறை இவரது சகோதரியின் மகன் அங்கே ஒரு குளத்தில் குளிக்கும் போது அதில் மூழ்கி இறந்து விடுவதாகவும், அவன் உடலை கொண்டு வந்து கர்ணி மாதா கடவுள் முன் கிடத்தி மகனைக் காப்பாற்றுப்படி கதறியுள்ளார்.

கர்ணி மாதா குழந்தையின் உயிரை திரும்ப கொடுக்கும் படி கெஞ்சினாராம். ஆனால் அந்த பையனின் ஆன்மா வேறு ஒரு உடலுக்கு கெடுத்துவிட்டதால் ஒன்றும் செய்ய முடியாது என கை விரித்து விட்டார்.

இதனால் கோபமடைந்த கர்ணி மாதா, இனி என் வம்சாவளியை சேர்ந்த யார் உயிர் போனாலும் அதன் ஆன்மா யாருக்கும் கொடுக்காமல், வேறு இடத்தில் பிறக்க வைக்காமல், இங்கேயே எலி உருவத்தில் பிறப்பெடுக்க வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாராம்.

இப்படி பிறந்த எலிகள் தான் இங்கு கோயில் முழுவதும் ஓடி ஆடி கொண்டிருக்கின்றன என்றும் ஒரு கதை கூறப்படுகிறது.

இதற்கிடையில் தவத்தில் இருந்த கர்னி மாதா திடீரென தெய்வமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசித்து செல்கின்றனர்.

எலி குடித்த பால் பிரசாதம்

இங்குள்ள எலிகளும் கடவுள்களாக பார்க்கப்படுகின்றது.

எலிகள் உண்பதற்கான உணவு மற்றும் பால் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் எலி குடித்த பால் தான் இங்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?