உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா மாவட்டத்தில் உள்ள இமயமலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இடம் தான் காசர் தேவி.
அழகான சிறிய குக்கிராமமாக இருந்தாலும் ஆன்மீக வசீகரம் மற்றும் பிரமிக்க வைக்கும் இயற்கைக்காட்சிகளுக்கு பெயர் பெற்றதாக உள்ளது.
இந்த விசித்திரமான கிராமம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. காசர் தேவி என்ற இந்த அழகிய கிராமத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.
காசர் தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கோவில் இங்கு இருப்பதால் இந்த கிராமம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது உத்தரகாண்டின் பிரபல புனிதமான தலங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
1920 களில், சுவாமி விவேகானந்தர் கோயிலுக்குச் சென்று தியானம் செய்தபோது கிராமம் பிரபலமானது.
நவீன காலத்திலும் கூட, காசர் தேவி உலகம் முழுவதிலுமிருந்து ஆன்மீக ஆர்வலர்களையும் ஈர்க்கிறது. இங்குள்ள சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காட்சிகள் முற்றிலும் வேறொரு உலகத்திற்கு நம்மை எடுத்து செல்லுமாம்.
அதுமட்டுமில்லாமல் நந்தா தேவி மற்றும் திரிசூல் மலைகளின் அழகிய பனி மூடிய சிகரங்களைக் கண்டு நீங்கள் திகைப்பீர்கள்.
காசர் தேவி இயற்கை ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. மறைக்கப்பட்ட நீர்வீழ்ச்சிகள், சுற்றிலும் காடுகள் என வழிநெடுக பிரமிக்க வைக்கும் பாதைகளால் இப்பகுதி நிரம்பியுள்ளது.
பஞ்சசூலி மற்றும் பின்சார் வனவிலங்கு சரணாலய மலையேற்றங்கள் இங்குள்ள சில முக்கிய இடங்களாகும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust