கேரளா : ஓடும் ரயிலில் தீவைத்த நபர்; 3 பேர் உயிரிழப்பு, 8 பேர் காயம் - என்ன நடந்தது? Twitter
இந்தியா

கேரளா : ஓடும் ரயிலில் தீவைத்த நபர்; 3 பேர் உயிரிழப்பு, 8 பேர் காயம் - என்ன நடந்தது?

பயணிகள் மீது எரியக்கூடிய திரவத்தை ஊற்றி பற்ற வைத்துள்ளார் அந்த நபர். இதில் இரண்டு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Antony Ajay R

கேரளா மாநிலம் ஆலப்புழா - கன்னூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக்கொண்டிருக்கும் போது அடையாளம் கண்டறியப்படாத ஒரு நபர் சக பயணிகள் மீது தீவைத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட 3 பேரின் உடல்கள் மரணமடைந்த நிலையில் இலத்தூர் ரயில் தண்டவாளம் அருகில் கிடைக்கப்பெற்றன.

இது தவிர 8 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு 9:45 மணி அளவில் கோரபுழா பாலத்தை ரயில் கடக்கும் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த மூவரும் தீப்பற்றியதும் ரயிலில் இருந்து பதட்டத்தில் குதித்திருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.

ரயில் கோழிக்கோடு நிலையத்தைத் தாண்டியதும் ரிசர்வ் கம்பார்ட்மெண்ட் உள்ளே வந்த நபர் தனது கையில் இரண்டு பாட்டில்களில் எரியக்கூடிய திரவம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு இரண்டு நபர்களுக்கு இடையில் வாக்குவாதம் நடைபெற்றதாக சில ஊடக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இதனால், அந்த நபர் பயணிகள் மீது திரவத்தை தெளித்து பற்ற வைத்ததாக கூறப்படுகிறது.

நெருப்பைப் பார்த்து பதட்டமடைந்த மக்கள் அக்கம் பக்கத்து ரயில் பெட்டிகளுக்கு ஓடினர்.

இதற்கிடையில் யாரோ அவசர சங்கிலியை இழுக்க கோரபுழா ஆற்றின் குறுக்கே உள்ள பாளத்தில் ரயில் நின்றுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் தப்பிவிட்டார். இரண்டு பெட்டிகளுக்கு சீல் வைத்தபின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டுள்ளது. '

தண்டவாளத்தில் கிடந்த 3 சடலங்கள் இன்று காலை தான் கண்டறியப்பட்டன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?