கோடை வெயிலுக்கு குளுகுளுனு ட்ரெக்கிங் செல்ல சூப்பர் ஸ்பாட் - 'ஹார்ட் ஏரி' பற்றி தெரியுமா? Twitter
இந்தியா

கோடை வெயிலுக்கு குளுகுளுனு ட்ரெக்கிங் செல்ல சூப்பர் ஸ்பாட் - 'ஹார்ட் ஏரி' பற்றி தெரியுமா?

செம்பரா மலை அடிவாரத்தின் வனத்துறை பேஸ் கேம்பில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் மலை ஏறினால் இதய ஏரி என்று அழைக்கப்படும் 'ஹிருதயசரஸ்' ஏரியை அடையலாம்.

Priyadharshini R

கோடை விடுமுறை ஆரம்பிக்கும் போது எந்த அளவுக்கு குதூகலம் இருந்ததோ அதே அளவிற்கு கடைசி வாரம் முடிவுறும் நேரம் வந்துவிட்ட போதிலும் குதூகலம் குறையாமல் சுற்றுலாத்தலங்களுக்கு பயண பிரியர்கள் சென்று வருகின்றனர்.

தேடித்தேடி சென்று பல்வேறு இடங்களை மக்கள் கண்டு ரசித்து தங்களின் சம்மர் வெக்கேஷனை என்ஜாய் செய்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் கூட்டம் குறைவான அதே நேரம் அழகான கேரளா ஸ்பாட் பற்றி உங்களுக்கு சொல்ல போகிறோம். கோடை வெயிலுக்கு ஏற்ற குளுகுளு ஸ்பாட் தான் இது!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ளது இந்த ஏரி அதன் வடிவத்திற்கு புகழ்பெற்றது.

கேரளாவின் வயநாடு அருகில் கல்பெட்டா நகர் உள்ளது. அங்குள்ள செம்பரா மலை அடிவாரத்தின் வனத்துறை பேஸ் கேம்பில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் மலை ஏறினால் இதய ஏரி என்று அழைக்கப்படும் 'ஹிருதயசரஸ்' ஏரியை அடையலாம்.

கேரள சுற்றுலா துறை இணையதளம் படி, மலையேற்ற நேரங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஆகும்.

செம்ப்ரா ஏரி மலையேற்றத்திற்கு வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னர் மலை ஏற தொடங்கலாம்.

இங்கு ஆகஸ்ட் முதல் மே வரை உள்ள நேரம் வானிலை மிதமாக இருப்பதால் இந்த நேரத்தில் பார்வையிட செல்வது சிறந்தது.

கோடை விடுமுறையும் முடியும் நேரம் என்பதால் இப்போது செல்வது சரியாக இருக்கும்.

இந்த இதய ஏரி தவிர்த்து குருவத்வீப், பாணாசுரா அணை, பூக்கோடு ஏரி, சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சிகள், மீன்முட்டி நீர்வீழ்ச்சிகள் ஆகியவை வயநாட்டில் பார்க்க வேண்டிய முக்கியமான சில இடங்கள் ஆகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?