Solo Travellar Woman ( Rep) Canva
இந்தியா

Kerala : தனியாக பயணிக்கும் பெண்களுக்காக APP அறிமுகப்படுத்தும் கேரளா - என்னென்ன வசதிகள்?

Keerthanaa R

சுற்றுலா செல்வது தற்போது டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக சோலோ ட்ரிப் செல்வது.

அதிலும், பெண்கள் தற்போது தனியே அதிகமாக பயணிக்க தொடங்கிவிட்டனர். இதனை ஊக்கப்படுத்தும் வகையில், கேரளா சுற்றுலா துறை ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு அமலில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, கேரளாவின் சுற்றுலா துறை, தனந்தனியாகவோ அல்லது குழுவாக சுற்றுலா செல்பவர்களில் தனியே பயணிக்கும் பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக செயலி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது என டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் கூறுகிறது

பெண்களுக்கு ஏதுவாக சுற்றுலா பேக்கேஜுகள், நாம் செல்லும் இடத்தை சுற்றிக் காண்பிக்க பெண் டூரிஸ்ட் கைடுகளை நியமிக்கும் திட்டங்கள் இதில் அடங்கும்.

மொபைல் செயலியான இதில் பெண்கள் தங்கக்கூடிய ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள், நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட டூர் ஆபரேட்டர்கள், பெண்கள் டூர் ஆபரேட்டர்கள், டிராவல் ஏஜென்சிகள், ஹோம்ஸ்டேகள் மற்றும் பெண் சுற்றுலா வழிகாட்டிகள் பற்றிய தகவல்களை பெறலாம்.

இந்த செயலியில் பெண்கள் தலைமையிலான கைவினைப் பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்களும் இடம்பெறும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

இதற்கான வழிமுறைகள், என்னென்ன செய்யலாம் என்பது குறித்த உள்ளடக்கத்தை திட்டமிடும்படி கேரள அரசாங்கம், மாநில சுற்றுலா பொறுப்பு இயக்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து பேசிய கேரள சுற்றுலா துறை அமைச்சர் பி ஏ முகமது ரியாஸ், “பெண்களுக்கு உகந்த சுற்றுலா சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம்” எனக் கூறியுள்ளார்

”தூர தேசங்களுக்கு பெண்கள் பயணிக்கும் டிரெண்ட் தற்போது அதிகரித்து வருகிறது. அப்படி பயணிக்கும் பெண்களுக்கு கேரளாவில் ஒரு சிறந்த சுற்றுலா அனுபவத்தை வழங்க இந்த வுமன் ஃபிரெண்ட்லி டூரிசம் பிராஜெக்ட் வழிவகுக்கும்” எனவும் அமைச்சர் கூறினார்.

ஐ.நா மாநாட்டில் தொடங்கப்பட்ட, “Gender Inclusive Tourism" முன்னெடுப்பின் ஒரு அங்கமாகவே இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2022ல் தொடங்கப்பட்டது இத்திட்டம். முன்பே குறிப்பிட்டது போல பெண்கள் பயணிக்க உதவும் பொருட்கள் மற்றும் டூரிசம் பேக்கேஜுகளை இந்த செயலி மூலம் அறிமுகப்படுத்தவுள்ளனர்

ஐ நா பெண்கள் அமைப்பு உட்பட பல அமைப்புகளின் ஆதரவு இருப்பதால், கிட்ட தட்ட 1.5 லட்சம் பெண்களை இந்த திட்டத்தில் பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளது கேரள அரசு.

மேலும், இதன் மூலம் 10,000 Women Venture மற்றும் சுற்றுலா துறையில் 30,000 வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடிவுசெய்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?