Woman beats harasser Youtube
இந்தியா

பாலியல் தொல்லை கொடுத்தவரை வெளுத்து வாங்கிய பெண்- வைரலாகும் வீடியோ

Keerthanaa R

பல தரப்பட்ட தடைகளைத் தாண்டி பெண்களை இன்று வீட்டை விட்டு வெளியில் வரவைத்திருந்தாலும், தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், மீண்டும் அவர்களை வீட்டிற்குள்ளேயே முடக்கிவிடலாம் என்ற எண்ணத்தைத் தான் சமயங்களில் கொடுக்கின்றன. ஆனால், அவ்வாறு நடந்தால் இனி வாய் மூடி இருக்கமாட்டோம் என்பது போல அமைந்துள்ளது, கேரளாவைச் சேர்ந்த இந்த பெண்ணின் துணிச்சல்.

Woman beats harasser

வயநாடு மாவட்டம், பனமாரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெங்கபள்ளி நோக்கி பஸ்ஸில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணித்துக்கொண்டிருக்கையில், பூவாழன் என்ற நபர், மது போதையில் பேருந்தில் ஏறியதாக தெரிகிறது. பேருந்தில் ஏறியவர், இந்த பெண்ணின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்துள்ளார்.


சிறிது நேரத்தில் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுக்கவே, ஆத்திரமடைந்த அந்த பெண் அவரை வேறு இருக்கையில் சென்று அமருமாறு கேட்டும், போதை ஆசாமி ஒத்துழைக்கவில்லை. தொடர்ந்து துன்புறுத்தவே, மற்றொரு பெண் பயணி நடத்துநரிடம் கூறி உதவி கேட்டபோது, பூவாழன் போதையில், அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி, பேருந்தை விட்டு இறங்கி, நகரவிடாமல் தகராறு செய்துள்ளார்.

Woman beats harasser

பின்னர் மீண்டும் பேருந்தில் ஏறி, அந்த பெண்ணை கன்னத்தில் அரையவே, இதுவரை பொறுத்திருந்த பெண், பூவாழனை கீழே தள்ளிவிட்டு, அடித்து உதைத்து, தன்னை துன்புறுத்தியதற்காக அவரை வெளுத்து வாங்கினார். இந்த சம்பவத்தின் வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த பெண்ணின் துணிச்சலைப் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?