Kerala : Would be couple fall into 120 feet quarry while taking selfie  Twitter
இந்தியா

150 அடி பள்ளத்தாக்கில் விழுந்த மணப்பெண்: துணிச்சலாக காப்பாற்றிய மாப்பிள்ளை - எங்கே?

இருவரும் குவாரியின் மேல் பகுதியில் நின்றவாறு செல்பி எடுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாந்திரா கால் வழுக்கி 150 அடி உயரத்தில் இருந்து குவாரியில் தேங்கிநின்ற தண்ணீருக்குள் விழுந்தார்.

Priyadharshini R

கேரள மாநிலத்தை சேர்ந்த வினு கிருஷ்ணன் - சாந்திரா ஜோடிக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன் இருவரும் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து பகல் 11 மணியளவில் பாரிப் பள்ளி வேளமானூர் காட்டுப்புரம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அந்த குவாரியில் 150 அடி உயரத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. அந்த இடத்தை பார்த்ததும் புது மண ஜோடி புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பியுள்ளனர்.

இருவரும் குவாரியின் மேல் பகுதியில் நின்றவாறு செல்பி எடுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாந்திரா கால் வழுக்கி 150 அடி உயரத்தில் இருந்து குவாரியில் தேங்கி நின்ற தண்ணீருக்குள் விழுந்தார்.

இதனையடுத்து உடனே வருங்கால மனைவியை காப்பாற்ற வினு கிருஷ்ணனும் தண்ணீருக்குள் குதித்தார்.

பின்னர் தண்ணீருக்குள் தத்தளித்துக்கொண்டு இருந்த சாந்திராவை மீட்டு அருகில் இருந்த குவாரி பாறையை பிடித்துக்கொண்டு சத்தம் போட்டனர்.

சத்தம் கேட்டு அந்த பகுதியில் ரப்பர் வெட்டும் பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்கள் வந்து முதலுதவி அளித்தனர்.

இதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் சேர்ந்து இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் 2 நாட்களில் நடைபெற இருந்த திருமணம் தள்ளி போனது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?