கேரளா டு மேகாலயா: ஏப்ரல் மாதம் சுற்றிப்பார்க்க 20 இடங்கள்! Twitter
இந்தியா

கேரளா டு மேகாலயா: ஏப்ரல் மாதம் சுற்றிப்பார்க்க 20 இடங்கள்!

இந்தியாவின் மலைத் தொடர்களில் இருக்கும் நீர் வீழ்ச்சிகள், ஏரிகள், அடர்ந்த காடுகள், வியூ பாயிண்ட்களை பார்க்க கோடைக்காலம் தான் சிறந்த தருணம். வரும் விடுமுறைகளில் கடற்கரைகள், குகைகள், பாரம்பரிய தளங்கள் இருக்கும் ஊர்களுக்கு பயணம் செய்து ஸ்ட்ரெஸ்ஸுக்கு குட்பாய் சொல்லலாம்!

Antony Ajay R

ஏப்ரல் மாதத்தில் இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்க ஏற்ற இயற்கை எழில் சூழ்ந்த 20 இடங்களை தொகுத்திருக்கிறோம். இதன் இரண்டாம் பகுதியே இந்தக் கட்டுரை.

முதல் பகுதிக்கு கீழே உள்ள கட்டுரையை க்ளிக் செய்யலாம்,

இடுக்கி, கேரளா

இடுக்கி, கேரளா

கேரளா ஏன் கடவுளின் சொந்த தேசம் எனப் புகழப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள இடுக்கிக்கு வந்தால் போதும்.

அத்தனை ஆறுகள், மலைகள் சூழ அமைந்திருக்கிறது இடுக்கி. இங்குள்ள மங்களதேவி ஆலயத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் புகழ்பெற்றது.

இடுக்கி ஆர்ச் அணை, இடுக்கி வனவிலங்கு சரணாலயம், கீழர்குத்து நீர்வீழ்ச்சி, வளரா நீர்வீழ்ச்சி மற்றும் ஹில் வியூ பார்க் ஆகிய இடங்களைச் சுற்றிப்பார்க்கலாம்.

இங்குள்ள செங்குத்தான பாறைகளும், அடர்ந்த காடும், தடாகங்களும் உங்களை கனவு உலகில் இருப்பது போல மூழ்கடித்துவிடும்.

நந்தின் மலை, கர்நாடகா

நந்தி மலை, கர்நாடகா

பெங்களூருவில் இருந்து 2 மணி நேரத்தில் செல்லக்கூடிய தூரத்தில் இருக்கிறது நந்திமலை. இந்த இடத்தில் பல ஆலயங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் சிதறிக்கிடக்கின்றன.

சைக்கிள் ஓட்டுதல், மலையேற்றம் மற்றும் கேம்பிங் செய்ய சிறந்த இடமாக இருக்கிறது நந்திமலை. பெங்களூரு மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

போரா குகைகள், ஆந்திர பிரதேசம்

போரா குகைகள், ஆந்திர பிரதேசம்

விஷாகப்பட்டினம் அந்தந்தகிரி மந்தலில் இருக்கும் போரா குகைகள் நாட்டில் உள்ள மிகப் பெரிய குகைகளில் ஒன்றாகும்.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த குகைகள் 1907ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இந்த குகைக்கு அருகில் உள்ள கோவிலும் மிக புகழ்பெற்றது.

ஷிலாங், மேகாலயா

ஷில்லாங், மேகாலயா

மேகாலயாவில் தலைநகரான ஷில்லாங் இந்தியாவில் அதிகமாக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் இடமாக இருக்கிறது.

அழகிய நகரமான ஷில்லாங்கில் அற்புதமான மலைகளின் காட்சிகளைப் பார்க்கலாம். ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் காடுகளின் கலவையில் அழகிய நகரமாக இருக்கிறது ஷில்லாங்.

யானை நீர்வீழ்ச்சி, லேடி ஹைடாரி பூங்கா, வார்ட்ஸ் ஏரி மற்றும் லைட்லம் கனியன்ஸ் ஆகிய இடங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது நாம் பார்க்க வேண்டியவை. இன்னும் பல இயற்கை அதிசயங்கள் ஷில்லாங்கில் நமக்காக காத்திருக்கும்.

அகர்தலா, திரிபுரா

அகர்தலா, திரிபுரா

திரிபுரா மக்களின் வித்தியாசமான கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் நிச்சயமாக செல்ல வேண்டிய இடம் அகர்தலா.

உஜ்ஜயந்தா கோட்டை மற்றும் திரிப்புரா அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய அறிவைப் பெற நாம் மிஸ் செய்யக் கூடாது.

ஜம்புய் மலைகள், திரிபுர சுந்தரி கோயில் மற்றும் நீர்மஹால் அரண்மனை ஆகிய இடங்களையும் நாம் பார்வையிடலாம்.

இங்கு கிடைக்கும் மூங்கில் உணவுகளையும் நிச்சயம் சுவைப்பார்க்க வேண்டும்.

குர்சியோங், மேற்கு வங்காளம்

குர்சியோங், மேற்கு வங்காளம்

குர்சியோங் டார்ஜிலிங்கில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டின் அத்தனை மாதங்களிலும் இதமான தட்பவெப்பம் நிலவும்.

"வெள்ளை ஆர்க்கிட் பூக்களின் நிலம்" எனவும் குர்சியோங் மலைப்பகுதி அழைக்கப்படுகிறது. பசுமையான சாலைகள், மூடுபனி மற்றும் அழகான நீர்வீழ்ச்சிகள் நிறைந்த இடமாக இருக்கிறது குர்சியோங்.

ஈகிள்ஸ் க்ராக், டார்ஜிலிங், டவ் ஹில் மற்றும் டவ் ஹில் பார்க் மற்றும் இங்குள்ள தேயிலை தோட்டங்களை சுற்றிப்பார்க்கலாம்.

லொனாவலா, மகாராஷ்டிரா

லொனாவலா, மகாராஷ்டிரா

மும்பை மற்றும் புனேவிலிருந்து எளிதில் அணுகக்கூடிய தொலைவில் அமைந்திருக்கிறது லொனாவலா.

இங்கு அருவிகளில் குளிக்கலாம், சில அற்புதமான மலையேற்றங்கள் இருக்கின்றன, ஏரிக்கரையில் முகாமிடுதல் மற்றும் கோயில்கள் மற்றும் பழமையான, பாழடைந்த கோட்டைகளுக்கு செல்லுவது என விடுமுறையைக் கழிக்க சிறந்த இடம்.

பாவ்னா ஏரி, லோகட் கோட்டை, கண்டாலா மற்றும் கர்லா குகைகளை நிச்சயம் பார்க்க வேண்டும்.

பஞ்சகனி, மகாராஷ்டிரா

பஞ்சகனி, மகாராஷ்டிரா

சஹ்யாத்ரி மலைத்தொடர் சூழ அமைந்திருக்கிறது பஞ்சகனி. ஏரிகள், சிகரங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை எனலாம்.

இயற்கையை விரும்பும் யாருக்கும் நிச்சயம் பிடித்த இடமாக பஞ்சகனி இருக்கும். மார்ச் முதல் மே வரை இங்கு ஸ்ட்ராபெர்ரி திருவிழா நடைபெறும்.

அலிபக், மகாராஷ்டிரா

அலிபக், மகாராஷ்டிரா

மும்பையில் இரண்டு மணி நேரத் தொலைவில் அமந்திருக்கிறது அலிபக். இது உள்ளூர் மக்களிடமும் மிகவும் புகழ்பெற்ற கடற்கரை.

கோடையில் சில்லான பீச் ஒன்றுக்கு செல்ல விரும்பினால் அலிபக் முதல் சாய்ஸாக இருக்கலாம். பல பிரபலங்களின் திருமண நிகழ்வுகளும் இங்கு நடைபெற்றிருக்கின்றன.

ஏராளமான கடற்கரைகள், கோட்டைகள் மற்றும் கோவில்களை இங்கு காணலாம்.

பச்மாரி, மத்தியபிரதேசம்

பச்மாரி, மத்தியபிரதேசம்

பச்மாரி சத்புரா மலைத்தொடரில் உள்ளது மேலும் இது 'சத்புராவின் ராணி' என்றும் அழைக்கப்படுகிறது.

கோவில்கள், வனவிலங்கு சரணாலயங்கள், காடுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் இங்கு காணப்படுகின்றன.

பாண்டவர் குகைகள், பச்மாரி கத்தோலிக்க தேவாலயம், சத்புரா தேசிய பூங்கா ஆகிய இடங்களை மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டும்.

குதிரை சவாரி, மலையேற்றம் மற்றும் ஜிப்லைனிங் இங்கு இருக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?