நால்வரை கொலை செய்த 19 வயது இளைஞர் canva
இந்தியா

KGF: "ராக்கி பாய் போல பிரபலமடைய வேண்டும்" - 4 பேரை கொலை செய்த 19 வயது இளைஞர் - எங்கே?

Keerthanaa R

மத்திய பிரதேசத்தில் 19 வயது இளைஞர் ஒருவர், கேஜிஎஃப் படத்தில் வரும் ராக்கி பாய் போல பிரபலமடைய வேண்டும் என்பதால், நான்கு பேரை கொலை செய்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது

இரு பாகங்களாக வெளியாகி, இந்தியா முழுவதும் புகழை அடைந்த படம் கேஜிஎஃப். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ராக்கி பாய் கதாபாத்திரம், சிறுவர் முதல் பெரியவர் வரை கவனம் ஈர்த்தது

திரைப்படங்களும், அதில் வரும் கதாபாத்திரங்களும், சிறிதளவேனும் நம் நிஜ வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் சிவபிரசாத் துர்வே என்ற இளைஞர் இரவில் உறங்கிக் கொண்டிருந்த பாதுகாவலர்களை அடித்து கொன்றிருக்கிறார்.

NDTVயின் அறிக்கைப்படி, சிவபிரசாத் கன்னட திரைப்படம் கேஜிஎஃப் ஐ பார்த்து பிரபலமடைய வேண்டும் என எண்ணியதால் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

போபாலில் ஒருவரை தலையில் கல்லை போட்டு அடித்து கொல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இரவு நேரங்களில் குறி வைத்து இவர் இந்த கொலைகளை நிகழ்த்தியுள்ளார். தானும் ராக்கி பாய் போல ஆக வேண்டும் என்பது இவரது கனவு என்றும் கூறியிருக்கிறார் சிவபிரசாத்.

KGF

மத்திய பிரதேசத்தில் மூன்று இரவுகளில் சாகர் என்ற இடத்தில் மூவரையும், போபாலில் ஒருவரையும் கொலை செய்துள்ள சிவபிரசாத், பாதுகாவலர்களை குறிவைத்து தாக்கியுள்ளார்

அனைவரையும் கல்லை வைத்து அடித்து கொன்றதால், மத்திய பிரதேசத்தில், Stone Man என்ற பெயரில் சிவபிரசாத் பிரபலமடைந்தார். இந்நிலையில், கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் இருந்து சிவபிரசாத் மொபைலை திருடியுள்ளார்.

Murder

அந்த செல் ஃபோனை வைத்து டிராக் செய்து தான் காவல் துறையினர் போபாலில் அவரை கைது செய்தனர். அதிகாலை 3.30 மணியளவில் பேருந்து நிறுத்தத்தில் சிவபிரசாத் போலீசிடம் சிக்கினார் என மத்திய பிரதேச மாநில அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள சிவ பிரசாத்திடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?