மரணத்தை முன்பே அறிந்த மருத்துவர்; மனைவிக்கு கொடுத்த பரிசு! ஒரு நெகிழ்ச்சி கதை ட்விட்டர்
இந்தியா

மரணத்தை முன்பே அறிந்த மருத்துவர்; மனைவிக்கு கொடுத்த பரிசு! ஒரு நெகிழ்ச்சி கதை

Keerthanaa R

தான் உயிரிழக்கப்போவதை அறிந்த தெலங்கானாவை சேர்ந்த மருத்துவர், தனது குடும்பத்தினருக்கு அதன் பிறகு கிடைக்கவேண்டிய பாதுகாப்பு அனைத்திற்கும் தக்க முன் ஏற்பாடுகள் செய்துவிட்டு இறந்திருக்கிறார்.

இவரது செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மரணம் அனைவரது வாழ்விலும் நிகழும் ஒன்று. ஆனால் எந்த நேரத்தில் நிகழும் என்பதை தான் நம்மால் கணிக்க இயலாது. அப்படி தெரிந்துவிட்டால் நம் வாழ்க்கையின் போக்கு மாறிவிடும்.

இருக்கும் நேரத்தில், நமக்கும் நமது அன்பானவர்களுக்கும் என்ன என்ன தேவையோ அதை செய்துவிட்டு சென்றுவிடவேண்டும் என ஓடியிருக்கிறார் இந்த மருத்துவர்.

தெலங்கானா மாநிலம் கம்மம் நகரை சேர்ந்தவர் ஹர்ஷவர்தன். 34 வயதாகும் இவர் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மார்ச் 24ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உயிரிழந்தார்.

இது நமக்கு செய்தியாக இருக்கலாம். ஆனால் அவர் இறப்பதற்கு முன் என்ன நடந்தது என்பது தான் நாம் இவரது மரணத்தை பற்றி இவ்வளவு பெரியதாக பேச முக்கிய காரணம்.

மருத்துவர் ஹர்ஷவர்தன், உடல்நலத்தின் மீது அதீத கவனம் செலுத்துபவர். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தார், தினமும் உடற்பயிற்சிகள் செய்வார்.

அப்படி ஒருநாள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் பொது திடீரென ரத்த வாந்தி எடுத்திருக்கிறார். மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதில் அவருக்கு நுரையீரல் புற்றுநோயுள்ளது தெரியவந்தது

ஹர்ஷவர்தனுக்கு 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் திருமணமானது. விசா ஏற்பாடுகள் செய்த பின்னர் தனது மனைவியை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்திருந்தார். கொரோனா காலம் என்பதால் மனைவி ஆஸ்திரேலியா செல்வதில் சற்று தாமதமானது

அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில்.

தொலைப்பேசி மூலம் பெற்றொருக்கு தகவல் அளித்தார், இந்தியாவுக்கு வரச்சொல்லி வற்புறுத்திய பெற்றோரை சமாதானம் செய்து ஆஸ்திரேலியாவிலேயே சிகிச்சை மேற்கொண்டார்.

மரணம் வெகு தொலைவில் இல்லை என உணர்ந்த ஹர்ஷவர்தன், மனைவியின் நிலை குறித்து ஆலோசிக்கிறார். தனது இளம் மனைவி விதவையாகி, அவரது வாழ்க்கை பாதிக்கப்படுமே என நினைத்தவர், மனைவியிடம் விவாகரத்தை கேட்டுள்ளார்.

முதலில் மனைவி மறுத்தாலும், இருவரும் கலந்தாலோசித்து, விவாகரத்து பெற்றனர். மேலும், தனது மறைவுக்கு பின் மனைவி பொருளாதார ரீதியில் எந்த வித கஷ்டத்தையும் அனுபவிக்கக் கூடாது என அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தார்.

தனது பெற்றோரின் எதிர்காலத்திற்கும் தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுத்திருந்தார்

கடந்த 2022 அக்டோபர் மாதம் இந்தியா வந்த ஹர்ஷவர்தன், பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் நேரம் செலவழித்து, 15 நாட்களில் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பினார்.

ஆஸ்திரேலியாவில், தனது வக்கீல் மூலம் இறந்த பிறகு தனது உடலை இந்தியாவிற்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்திருந்தார். கடந்த மார்ச் 24 ஆம் தேதி உயிரிழந்தார்.

ஏப்ரல் 5ம் தேதி அவரது உடல் தெலுங்கானாவில் உள்ள அவரது ஊருக்கு எடுத்துவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

மருத்துவர் ஹர்ஷவர்தனின் கதை பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?