அசோக் எல்லுசுவாமி

 

Twitter

இந்தியா

அசோக் எல்லுசுவாமி : எலான் மஸ்க் பாராட்டிய தமிழர் - யார் இவர்?

வோல்க்ஸ் வேகனில் 8 மாதம் ஆராய்ச்சிப் பணியாளராக இருந்தவர். ட்விட்டரில் எலான் மஸ்கின் பதிவை பார்த்து அப்ளை செய்திருக்கிறார். அதன் பின் நடந்தவை எல்லாம் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.

Antony Ajay R

சமீபத்தில் வெளியான ரைட்டர் படத்தில் இப்படியாக ஒரு வசனம் இருக்கும், “அவன் மட்டும் படிச்சிட்டான்னா… அண்ணன மாதிரி படிச்சிக்கோ, சித்திப்பாவ மாதிரி படிச்சிக்கோ, மாமாவ மாதிரி படிச்சிக்கோ-னு எங்கூறு புள்ளைங்க எல்லாத்தையும் படிக்க அனுப்புவோம்யா” என.

அப்படித்தான் நம் ஊரிலிருந்து ஒருவர் சர்வதேச அளவில் வெற்றி பெரும் போது அவரைப் போல வெற்றி பெரும் உந்துதல் நமக்குள்ளும் தொற்றிக்கொள்ளும். மிகச் சிறந்த உதாரணம் கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை. பன்னாட்டு நிறுவனங்களைக் குறிவைத்து வெற்றிப்பாதையை அமைத்துக்கொள்ளும் பலருக்கும் அவர் ஒரு முன்னுதாரணம். அந்த வரிசையில் அடுத்ததாக இடம் பிடிக்கிறார் மற்றொரு தமிழர் அசோக் எல்லுசாமி.

உலகின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவராரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தில் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கிறார் அசோக் எல்லுசாமி.

அசோக் எல்லுசுவாமி

ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் எலான் மஸ்க் சமீப காலமாக என்ன ட்வீட் செய்தாலும் நெட்டிசங்களுக்கு செம கன்டென்ட் ஆகிவிடுகிறது. அப்படி ஒரு ட்விட்டில் தான் அசோக் எல்ல்சாமி கண்டுபிடிக்கப்பட்டார். அதில் அசோக் எல்லுசாமியை புகழ்ந்து கொட்டியிருப்பார் எலான் மஸ்க். அப்படி என்ன ஸ்பெசல் அசோக்கிடம் எனப் பார்க்கப்போனால்..

ஆட்டோ பைலட் அசோக்

எரிபொருள் உபயோகத்தைக் குறைத்து மின்சார வாகனங்களை உபயோகிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். டெஸ்லாவைப் போல மின்சார கார்களை எல்லா நிறுவனங்களும் தயாரிக்கத்தான் செய்கின்றன. ஆனால் டெஸ்லாவின் ஆட்டோ பைலட் டெக்னாலஜியை சேஸ் செய்வது கூகுள் உள்ளிட்ட எல்லா பெரு நிறுவனங்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய எலான், “டெஸ்லாவின் ஆட்டோ பைலட் டெக்னாலஜியை பாராட்ட விரும்பும் அனைவரும் அதன் ஏஐ டீம் தலைவரான ஆண்ட்ரேஜ்-ஐ பாராட்டுகின்றர். உலகின் தலைசிறந்த புத்திசாலிகள் எங்கள் ஏஐ டீமில் இருக்கின்றனர். ஆனால் ஆட்டோபைலட் டெக்னாலஜி வெற்றிக்குப் பின் இருப்பவர், ஆட்டோ பைலட் பிரிவின் இயக்குநரான அசோக்” என அசோக்கை அறிமுகப்படுத்தினார்.

அசோக் எல்லுசுவாமி

அசோக் டெஸ்லாவில் இணைந்தது எப்படி?

2015-ம் ஆண்டு எலான்மஸ்க் அவரது ட்விட்டர் கணக்கில் ஆட்டோ பைலட் குழுவில் இணைய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தார். அதைப் பின் தொடர்ந்த அசோக் தேர்ச்சியடைந்து ஆட்டோ பைலட் டீமின் சாஃப்ட்வேர் இஞ்சினியராக பணியில் சேர்ந்தார். இப்போது அந்த பிரிவின் இயக்குநராக உயர்ந்திருக்கிறார். டெஸ்லாவின் ஆட்டோ பைலட் பிரிவில் முதல் நபராக பணியில் சேர்ந்தது அசோக் எல்லுசாமிதான்.

அசோக் எல்லுசாமி?

2005-2009 பேட்ச் அண்ணா பல்கலைக்கழகத்தில் இசிஇ படித்தார் அசோக். படித்த உடன் சென்னை WABCO நிறுவனத்தில் வேலை கிடைக்க இரண்டரை ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள கார்கி மெலான் பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் சிஸ்டமில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் வோல்க்ஸ் வேகனில் 8 மாதம் ஆராய்ச்சிப் பணியாளராக இருந்தவர். ட்விட்டரில் எலான் மஸ்கின் பதிவைப் பார்த்து அப்ளை செய்திருக்கிறார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?