G20: மோடி ஜோபைடனுக்கு காட்டிய கோனார்க் சக்கரம் - என்ன சிறப்பு? Twitter
இந்தியா

G20: மோடி, ஜோ பைடனுக்கு காட்டிய 'கோனார்க் சக்கரம்' - என்ன சிறப்பு?

தலைவர்களை பாரத் மண்டபத்தில் கோனார்க் சக்கரத்தின் முன்னிலையில் வரவேற்கிறார் பிரதமர் மோடி. இந்த கோனார்க் சக்கரம் காலத்தையும் முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் அடையாளப்படுத்துவது.

Antony Ajay R

இந்தியா தலைமைத்தாங்கும் ஜி 20 மாநாடாடு நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட உலகின் மிகப் பெரியத் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

தலைவர்களை பாரத் மண்டபத்தில் கோனார்க் சக்கரத்தின் முன்னிலையில் வரவேற்கிறார் பிரதமர் மோடி. இந்த கோனார்க் சக்கரம் காலத்தையும் முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் அடையாளப்படுத்துவது.

13ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிற்பம் ஒடிஷாவின் சூரியக் கோவிலில் இருக்கிறது.

ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கோனார் சக்கரத்தின் தத்துவத்தை விவரிப்பதை சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்போம்.

கோனார்க் சூரிய கோவில் கங்கா வம்சத்தின் மன்னர் முதலாம் நரசிம்மதேவா என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஒரு தேரின் வடிவில் உருவாக்கப்பட்டிருக்கும்.

இதன் சக்கரம் ஒவ்வொன்றும் 9அடி 9இன்ச் விட்டம் கொண்டதாக இருக்கும். விஷ்ணுவின் கையில் இருக்கும் காலச்சக்கரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது இந்தக் கோவில்.

கோனார் சக்கரத்தை நாம் 10 ரூபாய் தாளில் பார்த்திருக்கலாம். இந்திய கலாச்சாரத்தில் கலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் பெருமைமிக்க சின்னமாக கோனார்க் சக்கரம் பார்க்கப்படுகிறது.

கோனார்க் கோவிலின் சிறப்புகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?