கோழிக்கோடு: வாஸ்கோடகாமா வந்திறங்கிய ஊருக்கு ஒரு பயணம்!- மனம் மயக்கும் கடற்கரைகள் தெரியுமா?  Twitter
இந்தியா

கோழிக்கோடு: வாஸ்கோடகாமா வந்திறங்கிய ஊருக்கு ஒரு பயணம்!- மனம் மயக்கும் கடற்கரைகள் தெரியுமா?

நீங்கள் ஒரு ஃபுட்டியாக இருந்தால் நிச்சயம் கோழிக்கோடுக்கு வந்திருப்பீர்கள். இல்லை என்றால் நிச்சயம் வர வேண்டும். ஏனென்றால்...

Antony Ajay R


கோழிக்கோடு ஒர் கடற்கரை நகரம் என்பதை அறிவோம்.  இங்கு இரண்டு கடற்கரைகளை நிச்சயமாக பயணம் செய்பவர்கள் பார்க்க வேண்டும். ஒன்று கோழிக்கோடு கடற்கரை, மற்றொன்று பேய்பூர் கடற்கரை.

இந்த கோழிக்கோடு கடற்கரை வழியாக தான் மிளகு வாணிபம் நடைபெற்றது. 

நீங்கள் கோழிக்கோடு போகும்போது அந்த கடற்கரை மண்ணில் கால்வைத்தபடி நினைத்துக்கொள்ளுங்கள், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு முதல் ஐரோப்பியராக வாஸ்கோடகாமா வந்திறங்கியது இதே மண்ணில் தான்! இந்திய விடுதலைப்பயணத்தின் முதல் பக்கத்தில் இருக்கிறீர்கள்!

வாஸ்கோடகாமாவுக்கு முன்னர் கோழிக்கோடு அரபு வணிகர்கள் அதிகம் புலங்கிய நகரமாக இருந்தது. அதன் சாட்சியாக இன்றும் இங்கு பல பழமையான பள்ளிவாசல்கள் இருப்பதைக் காணலாம். 

இப்போதும் இங்கு வணிகர்களின் போக்குவரத்து அதிகம் தான். மீன், மாட்டுக்கறி, இறால் என பல நாடுகளுக்கு இங்கிருந்து உணவுப்பொருட்கள் செல்கின்றன.

இங்குள்ள மீன் மார்கெட் கலாச்சார பிரதிபலிப்பாக இருக்கும். அதைச் சுற்றியிருக்கும் சாப்பாட்டு கடைகளும். 

நீங்கள் ஒரு உணவுப்பிரியராக இருந்தால் நிச்சயமாக கோழிக்கோடுக்கு வர வேண்டும். இங்கு எண்ணற்ற ஸ்நாக்ஸ்களை சாலையோரக்கடைகளில் பார்க்கலாம். 

கோழிக்கோடு ஹல்வா, பீஃப் ஊறுகாய், பரோட்டா பீஃப் காம்போ, பாய்கடை பிரியாணி எல்லாம் ஆசை அடங்கும் வரை ருசிப்பார்க்க நாம் ஒரு ஜென்மத்தில் கோழிக்கோடுவாசியாக பிறந்தால் தான் முடியும்.

கேரளாவில் சுற்றிப்பார்க்க பல ஊர்கள், ஒவ்வொரு ஊருக்கும் பல சிறப்புகள் இருந்தாலும் கோழிக்கோடு பலருக்கும் மனதுக்கு இதமான ஊராக விளங்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?