இந்தியாவில் மற்றொரு காஷ்மீர்: மைனஸ் டிகிரியில் மயக்கும் லம்பாசிங்கி கிராமம்! ஏன் ஸ்பெஷல்? twitter
இந்தியா

இந்தியாவில் மற்றொரு காஷ்மீர்: மைனஸ் டிகிரியில் மயக்கும் லம்பாசிங்கி கிராமம்! ஏன் ஸ்பெஷல்?

சற்றே வித்தியாசமாக, அதிகம் பார்க்கப்படாத இடங்களுக்கு செல்லவேண்டும் என்று நீங்கள் ஆசைக் கொண்டிருந்தால், லம்பாசிங்கி என்ற இடத்தை தேர்வு செய்யுங்கள்

Keerthanaa R

சுட்டெரிக்கும் வெயிலில் கொஞ்சம் சில்லென்று இருக்கும் இடங்களுக்கு போய் வரலாம் என்று தோன்றும். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, கூர்க் என்று அரைத்த மாவையே அரைத்தால் போர் அடிக்கும்.

வட மாநில பகுதிகளை கண்டு வரலாம். மணாலி, காஷ்மீர், லடாக் போன்ற பகுதிகளுக்கு டிரிப் போகலாம். ஆனால் இதுவும் நாம் வழக்கமாக கேள்விப்பட்ட இடங்கள் தான்.

சற்றே வித்தியாசமாக, அதிகம் பார்க்கப்படாத இடங்களுக்கு செல்லவேண்டும் என்று நீங்கள் ஆசைக் கொண்டிருந்தால், லம்பாசிங்கி என்ற இடத்தை தேர்வு செய்யுங்கள்

உரைக்கும் பனி

ஆந்திர பிரதேச மாநிலம், விசாகபட்டினத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது லம்பாசிங்கி மலைப்பிரதேசம். கடல்மட்டத்திலிருந்து சுமார் 1000 மீ மேல் இருக்கும் இந்த இடத்தை தென்னிந்தியாவின் காஷ்மீர் என்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம், இங்கு விண்டர் சீசன் தொடங்கினால் பனிப்பொழியும்! தென்னிந்திய பகுதிகளில் ஸ்னோ ஃபால் ஏற்படும் ஒரே இடம் இந்த லம்பாசிங்கி மலைக் கிராமம் தான்.

லம்பாசிங்கி கிராமத்தை கொர்ரா பயாலு என்றும் அழைக்கின்றனர். அதாவது வெளியில் ஒருவர் இருந்தால், பனியில் உரைந்துவிடுவார் என்பதை குறிக்கிறது இந்த மற்றொரு பெயர்.

மைனஸ் டிகிரி

அழகிய அடர்ந்த வனப்பகுதியும் மலைகளும் சூழ்ந்தது இந்த கிராமம்.

இந்த லம்பாசிங்கி கிராமத்தின் வெப்பநிலை ஆட்டோமாட்டிக் வெதர் ஸ்டேஷன் (AWS) மற்றும் சிந்தப்பள்ளியில் உள்ள பிராந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றின் பாதரச அளவுகளை பொறுத்து பதிவிடப்படுகிறது.

சமயத்தில் கிராமத்தின் வெப்ப நிலை 2 டிகிரியை, மைன்ஸ் டிகிரியைக் கூட தொடுமாம்! கடைசியாக டிசம்பர் 2018ல் 1.50 டிகிரி செல்சியஸை வெப்பநிலை தொட்டது என டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் கூறியுள்ளது. லம்பாசிங்கியில் எப்போதுமே வெப்பநிலை 10 டிகிரிக்கும் குறைவாகவே இருக்கிறது

எங்கெல்லாம் செல்லலாம்?

தஜாங்கி நீர்த்தேக்கம்:

இந்த சிறிய நீர்த்தேக்கமானது புகைப்படக் கலைஞர்களுக்கு ஃபேவரட் ஸ்பாட் ஆக இருக்கும். சுற்றியிருக்கும் மலைகள், தண்ணீர், இயற்கை, அமைதியான சூழல் அங்கு வருபவர்களை வெகுவாக ஈர்க்கிறது

சுசன் தோட்டம்:

இந்த தோட்டத்தில் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் பூக்களை பார்க்கலாம். இந்த தோட்டத்தில் அனைவருக்கும் அனுமதி உள்ளது மற்றும் இங்கு சன்செட் பாயிண்ட்டும் உள்ளது.

கோத்தப்பள்ளி நீர்வீழ்ச்சி:

அரக்கு பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது இந்த கோத்தப்பள்ளி நீர்வீழ்ச்சி. லம்பாசிங்கியிலிருந்து சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த இடம் மனிதர்களால் அதிகம் எக்ச்பிளோர் செய்யப்படாமல் இருக்கிறது.

உப்பாடா பீச்:

லம்பாசிங்கியிலிருந்து 2 மணி நேர தொலைவில் இருக்கிறது உப்பாடா கடற்கரை. இதுவும் மக்களால் அதிகம் பார்க்கபடாத இடங்களில் ஒன்று

எப்படி செல்வது?

விசாகப்பட்டினத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் லம்பாசிங்கி மலைக் கிராமத்திற்கு சாலை மார்கமாகவே செல்லலாம். அதிகம் மக்களால் பார்க்கபடாத இடமாக இருப்பதால் இங்கு தங்கும் வசதிகள் சற்று குறைவே.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?