Advertisement Twitter
இந்தியா

லேயர் ஷாட் விவகாரம் : பாலியல் குற்றத்தை ஊக்குவித்த விளம்பரம் - மன்னிப்பு கேட்ட நிறுவனம்

Antony Ajay R

கடந்த வாரம் லேயர்ஸ் ஷாட் எனும் நறுமண திரவிய நிறுவனம் சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த விளம்பரத்துக்கு மன்னிப்பு கேட்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

அந்த விளம்பரம் குறித்து சமூக வலைத்தளங்களின் நெட்டிசன்கள் பல கேள்விகளை எழுப்பினர்.

லேயர் ஷாட் நிறுவனத்தின் விளம்பரம் நேரடியாக பாலியல் வன்புணர்வை ஆதரிக்கும் வகையில் இருப்பதாகக் கூறப்பட்டது. இது விளம்பரங்களின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது.

அத்துடன் சமூக வலைத்தளங்களில் பெண்ணியவாத அமைப்புகள் உட்படப் பல தரப்புகளிலிருந்து எதிர்மறை விமர்சனங்களை அந்நிறுவனம் பெற்றது.

அந்த விளம்பரத்தை ட்விட்டர் மற்றும் யூடியூப்-லிருந்தும் ட்விட்டர் உள்ளிட்ட தளங்களிலிருந்தும் நீக்கிடத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாருடைய உணர்வுகளையும், பெண்களின் கண்ணியத்தையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. தனி நபர்கள் மற்றும் சமூகங்களிடையே கோபத்தை ஏற்படுத்திய விளம்பரம் குறித்து நாங்கள் மன்னிப்புக் கேட்கிறோம்” என தெரிவித்துள்ளது.

பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தர், நடிகை ரிச்சா சதா, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பிரபலங்கள் அந்த விளம்பரத்துக்கு கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?