பாகிஸ்தான் பெண்ணை 7 ஆண்டுகளுக்கு பின் கரம் பிடிக்கும் இந்தியர்- கடல் கடந்த காவிய காதல் கதை Twitter
இந்தியா

பாகிஸ்தான் பெண்ணை 7 ஆண்டுகளுக்கு பின் கரம் பிடிக்கும் இந்தியர்- கடல் கடந்த காவிய காதல் கதை

Priyadharshini R

7 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவை சேர்ந்த இளைஞரும் பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணும் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக அவர்கள் கடந்த இன்னல்கள் குறித்து கூறியிருக்கின்றனர்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பஞ்சாபின் படாலாவில் வசிக்கும் நமன் லுத்ராவும், பாகிஸ்தானின் லாகூரில் வசிக்கும் ஷாலீனும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

இந்த ஜோடிக்கு 2016 இல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவில் ஏற்பட்ட கசப்பானது அவர்களது திருமணத் திட்டங்களை நிறுத்தியது.

Marriage (Rep)

ஒவ்வொரு முறையும் அவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது, அவர்களது விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆனால், நமன் மற்றும் ஷாலீன் இருவரும் தங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை.

மணமகன் நமன் லுத்ரா இது குறித்து கூறுகையில்,

"ஏழெட்டு வருடங்களாக விசாவுக்காக போராடினோம்.

ஒவ்வொரு முறையும் விசா கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் திருமணத்துக்குத் தயாராகிவிடுவோம், ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சும். இப்படி தொடர்ந்து தூதரகத்திடமிருந்து மறுப்பு வந்ததால், குடும்பத்தினர் அனைவரின் மனநிலையும் மாறிவிட்டது.

நான்காவது முறையாக விசாவிற்கு விண்ணப்பித்தோம், அப்போது தான் கிடைத்தது." என்றார்.

மணமகள் ஷாலீன்,

"இவ்வளவு போராட்டங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்று அதுவரை எனக்குத் தெரியாது, எங்கள் வாழ்க்கையை ஒன்றாகக் கழிக்க போகிறோம் என்று நினைத்து எங்கள் உறவு வலுப்பெற்றது." என்றார்

ஷாலீனின் குடும்பத்திலிருந்து, அவரது தாய் மட்டுமே அவருடன் இந்தியா வந்துள்ளார். மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு விசா மறுக்கப்பட்டது.

ஷாலீனின் தாய் கூறுகையில்

"நாங்கள் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஒருவர் தனது இலக்கை அடைய பல சிரமங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. எங்கெல்லாம் சிரமங்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள வேண்டும், அப்போதுதான் ஒருவர் தங்கள் இலக்கை அடைவார்.

நாங்கள் எங்கள் மகளை எதிர்காலத்தில் சந்திக்க விரும்பும்போது இவ்வளவு சிரமங்களைச் சந்திக்கக் கூடாது, இவ்வளவு நேரம் காத்திருக்கக் கூடாது என்று நாங்கள் கவலைப்படுகிறோம்" என்றார்

இரண்டு குடும்பங்களும் தங்களின் அத்தியாவசியமான தேவைக்கு விசா வழங்குமாறு அந்தந்த அரசாங்கத்திடம் மன்றாடுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?