கர்நடகாவின் தும்குர் மாநிலத்தில் இருக்கிறது மதுகிரி மலை. இது அந்த மாநிலத்தின் அடையாளங்களில் ஒன்றாகும். மதுகிரி மலையில் ஒரு கோட்டையும் உள்ளது.
3,930 அடி உயரத்துக்கு கம்பீரமாக நிற்கும் மதுகிரி மலைக்கோட்டைதான் ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒற்றைக்கல் பாறையாக கருதப்படுகிறது. மதுகிரி மலையானது பெங்களூரில் இருந்து 105 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர்.
17ம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு காலத்தில் மன்னர் ஹிரே கௌடாவால் கட்டப்பட்டது இந்த பிரம்மாண்ட கோட்டை. 18ம் நூற்றாண்டில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் காலத்தில் இந்த கோட்டை இன்னும் வலிமைபெற்றது.
1791ம் ஆண்டின் போது மைசூரு படைகளுக்கும் பிரிட்டிஷாருக்கும் நடந்த போருக்கு பிறகு, இந்த கோட்டை பிரிட்டிஷ் கைக்கு வந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிர்கொள்ள சவாலாக இருந்த முக்கியமான இந்தியக் கோட்டை இதுவாகும்.
இந்த கோட்டை முழுக்க முழுக்க கிராணைட் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. நுழைவாயில்கள், சுவர்கள், கோட்டைகள் மற்றும் காவற்கோபுரங்கள் என ஒரு பாதுகாப்பான அரண்மனைக்கு எடுத்துக்காட்டாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோட்டையின் மிகப் பெரிய வாசல் தித்திபாகிலு அல்லது நரகத்தி வாசல் என அழைக்கப்படுகிறது. இதில் இருக்கும் 7 சுற்றுச்சுவர்கள் மிகவும் செங்குத்தானவை.
எதிரிகள் சுவரில் ஏறுவதென்பது முற்றிலும் முடியாத காரியமாக இருக்கும். இங்குள்ள இராணுவ நுழைவு வாயிலில் ஆபத்துகாலத்தில் வீரர்கள் தப்பி ஓடுவதற்கான நுழைவு வாயில்களும் இருந்திருக்கின்றன.
மதுகிரி மலைக்கோட்டையில் மலையேற்றம் செய்வது இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு பிடித்த செயல்பாடாக இருக்கிறது. 2,3 மணி நேரம் 3.5 கிலோமீட்டர் மலையேற்றம் செய்ய வேண்டும்.
மலையில் ஏறும்போது சுற்றியுள்ள மலைகள் மற்றும் சிறிய கிராமங்களைப் பார்க்கும் போது மனது கொள்ளைப் போகும். மலையின் உச்சிக்கு ஏறுவது ரிஸ்க் தான் என்றாலும் மேலிருந்து பார்க்கும் காட்சிகள் அதற்கான சரியான பலனாக இருக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust