police twitter
இந்தியா

மத்திய பிரதேசம் : பசிக்கு பணம் கேட்ட 6 வயது சிறுவனை கொலை செய்த போலீஸ்

வயிறு பசிப்பதாகக் கூறி பணம் கேட்ட 6 வயது சிறுவனின் கழுத்தை போலீசார் ஒருவர் நெரித்து கொலை செய்த சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

Priyadharshini R

மத்தியப் பிரதேச மாநிலம் டாடியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மே 5 ஆம் தேதி 6 வயது சிறுவன் காணாமல் போனதாகப் போலீசில் புகார் அளித்தார். இதனடிப்படையில் விசாரணை செய்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது பஞ்சசீல் நகர் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்றைப் பார்த்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அது குவாலியரின் போலீஸ் பயிற்சிப் பள்ளியில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் ரவி ஷர்மாவினுடையது என்பது தெரியவந்தது.

cctv

இதையடுத்து ரவி ஷர்மாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சம்பவத்தன்று ஒரு ரத யாத்திரையின் பாதுகாப்புப் பணிக்காக டாடியாவுக்கு சென்ற ரவி ஷர்மா, அங்கு ஒரு சிறுவன் தன்னிடம் உணவுக்காகப் பணம் கேட்டபோது பொறுமை இழந்து கழுத்தை நெறித்துக் கொன்றதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுவனின் உடலை காரின் பின்புறத்தில் வைத்து டாடியாவில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள குவாலியர் நகரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ரவி ஷர்மா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக பணிநீக்கம் செய்யுமாறு மாநில காவல்துறை தலைமையகத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளர் அமன்சிங் ரத்தோர் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?