Electricity Pexels
இந்தியா

'3419 கோடி' மின் கட்டணத்தால் அதிர்ச்சியடைந்த நபர்; மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது?

Keerthanaa R

3419 கோடி ரூபாய் மின்சார கட்டணம் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர். இதனால் உடல்நலக்குறைப்பாடு ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மின்சார கட்டணம் என்பது நம் வீடுகளில் எவ்வளவு முக்கியமான விஷயம் என்று நன்கு அறிவோம். அறையை விட்டு வெளியேறும்போது லைட்டையும் ஃபேனையும் மறக்காமல் அணைப்பது டங்ஸ்டன் பல்புகளை எல்இடியாக மாற்றுவது என மின்கட்டணத்தைக் குறைக்க பல முயற்சிகளை மேற்கொள்வது வழக்கம்.

இப்படியிருக்க, கொரோனா பெருந்தொற்று காலத்தில் குறைவாகவே மின்சாரத்தைப் பயன்படுத்தியும் ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் வந்ததால் சர்ச்சைகள் எழுந்தது.

500, 1000 அதிகமாக வந்ததே நம்மை தூக்கிவாரிப் போட்டது என்றால், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு வந்துள்ள மாதாந்திர மின் கட்டணம் அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்துள்ளது.

சாதாரணமாக நூறுகளில் இருக்கும் மின் கட்டணம், சமயத்தில் ஆயிரத்தைத் தொடும். ஆனால் இவருக்கு வந்த மின் கட்டணம் ரூ.3,419 கோடி!

மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தின் பிரியங்கா குப்தாவுக்கு கடந்த 20ஆம் தேதி மாதாந்திர மின் கட்டணம் வந்துள்ளது. இதை பார்த்த பிரியங்காவின் மாமனாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனால் உடல்நலக் குறைவு ஏற்பட, அவரை மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இதை பற்றி மின்சார துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Madhya Pradesh Madhya Kshetra Vidyut Vitran Company (MPMKVVC)-ல் இது சரிபார்க்கப்பட்டது. அதில் தான் அவர்களது மாதாந்திர கட்டணம் ரூ.1,300 தான் என்றும் இது ஊழியர்களின் பிழையினால் (Human Error) ஏற்பட்ட குழப்பம் என்றும் தெரியவந்துள்ளது.

MPMKVVC -ன் மேலாளர் நிதின் மாங்க்லிக் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?