”தாம்பத்திய உறவுக்கு மறுத்தால் விவாகரத்து பெறலாம்” - மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் Twitter
இந்தியா

தாம்பத்தியத்திற்கு மனைவி மறுப்பு; கொடுமைப்படுத்துவதற்கு சமம் - ம.பி உயர்நீதிமன்றம் கருத்து

“உடல்ரீதியான காரணங்கள் எதுவுமின்றி நீண்டகாலம் கணவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள மனைவி மறுப்பது, மனதளவில் கொடுமைப்படுத்தும் செயலாகும். இதனை காரணமாகச் சொல்லி விவாகரத்து பெறலாம்" என உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Priyadharshini R

உலகம் முழுவதும் விவாகரத்து என்ற விஷயம் அதிகமாக ஏற்படுகிறது. காதல் திருமணமாக இருந்தாலும் சரி, பெற்றோர்களால் நடத்தப்படும் திருமணமாக இருந்தாலும் சரி பிடிக்கவில்லை என்றால் பிரிந்து அவரவர் வாழ்க்கையை வாழ தொடங்கிவிடுகின்றனர்.

திருமணம் செய்த பின் தம்பதிகளிடையே சிறு சிறு பிரச்னைகள் உருவாகிறது, அது காலப்போக்கில் பெரிய பிரச்னையாக வெடிகிறது.

அதில் பெரும்பாலான பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும். தீர்க்கமுடியாத பிரச்னை நீதிமன்றம் வரை சென்று திருமணமான தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிவார்கள். விவாகரத்து பெற பல சட்டங்கள் மற்றும் பல்வேறு காரணங்கள் உள்ளன.

அந்த வகையில் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் கருத்தை தெரிவித்திருக்கிறது.

“உடல்ரீதியான காரணங்கள் எதுவுமின்றி நீண்டகாலம் கணவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள மனைவி மறுப்பது, மனதளவில் கொடுமைப்படுத்தும் செயலாகும். இதனை காரணமாகச் சொல்லி விவாகரத்து பெறலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006ல் திருமணமான 16 நாட்களில், தான் வெளிநாடு புறப்படும் வரை உடலுறவுக்கு மனைவி சம்மதிக்காததால், இத்தனை வருடங்கள் கழித்து விவாகரத்துக்கு கோரியுள்ளார் கணவர். விவாகரத்து தர மறுத்த கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் இந்த கருத்து பேசுபொருளாக மாறியிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?