Uddhav Thackeray Twitter
இந்தியா

மகாராஷ்டிரா அரசியல் பரபரப்பு: குடும்பத்துடன் அரசு பங்களாவை காலி செய்த உத்தவ் தாக்ரே

NewsSense Editorial Team

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் சிவசேனா கூட்டணி 169 MLA-க்கள் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. 114 MLA-க்கள் ஆதரவுடன் பாஜக கூட்டணி எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே 40 MLA-க்களுடன் சமீபத்தில் குஜராத் சென்றார். அங்கு பாஜகவின் மூத்த தலைவர்களை அவர்கள் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Uddhav Thackeray

இந்த நிலையில் நேற்று மேலும் சில MLA-க்கள் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையில் 46 MLA-க்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அம்மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டேவிற்கு எதிராக சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏக்நாத் ஷிண்டே ஒரு துரோகி என்ற கோஷத்துடன் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏக்நாத் ஷிண்டே

மறுபுறம் "ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும், முதல்வர் உத்தவ் தாக்ரே சிரித்த முகத்துடன் அமைதியாக அமைச்சர்களுடன் வீடியோ conference-ல் பேசியதாகவும்" அம்மாநில அமைச்சர் நிதின் ராவத் கூறியுள்ளார்.

இவ்வாறு ஒருபுறம் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்று சொல்லப்பட்டாலும், முதல்வருக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்தில் இருந்து தன் குடும்பத்துடன் காலி செய்த உத்தவ் தாக்ரே மும்பையில் உள்ள தனது சொந்த இல்லத்திற்கு சென்றார். வழி நெடுகிலும், அவரது வீட்டின் முன்பும் தொண்டர்கள் குவிந்திருந்தனர். அவர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் உத்தவ் தாக்ரே தனது இல்லத்திற்குக் குடிபெயர்ந்தார்.

உத்தவ் தார்ரேவின் இந்த நடவடிக்கை விரைவில் மகாராஷ்டிர அரசியலில் பெரும் பூகம்பம் வெடிக்கப் போவதைக் காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் செயல்பாட்டாளர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?