மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.
பின்னர் டார்ஜிலிங்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மம்தா அங்கு உள்ள மக்களை சந்தித்தார். இதற்கிடையில் சாலையோரத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தி வருகிற 'சண்டே ஹாட்' என்ற பானி பூரி கடைக்குச் சென்றார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு அங்கு பானிபுரி தயாரித்துக் கொடுப்பதை மம்தா கண்டார். அங்கு பணிபுரியும் பெண்களின் உழைப்பைப் பாராட்டியதோடு, எந்த ஒரு தயக்கமும் இன்றி அந்தப் பெண்களுடன் சேர்ந்து தானும் பானி பூரி தயாரிப்பதாகக் கூறினார்.
அவர் பூரிக்குள் மசித்த உருளைக்கிழங்கை வைத்து, பானியில் நனைத்து தனது கைப்பக்குவத்தை காட்டினார். அந்த பானி பூரியை அவர் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கினார். இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
இந்த வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து, அது வைரலானது.
மம்தா பானர்ஜி, டார்ஜிலிங்குக்குக் கடந்த முறை சென்றபோது சாலையோர கடை ஒன்றில் 'மோமோ' தயாரித்துக்காட்டி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust