டார்ஜிலிங் டூ ஊட்டி : ஆங்கிலேயர்களால் புகழ்பெற்ற இந்த அழகிய மலைப்பிரதேசங்கள் - ஒரு பார்வை

ஆங்கிலேயர்களால் புகழ் பெற்ற அந்த அழகிய மலைவாசஸ்தலங்கள் எவை எவை என்பதை இங்கே அறிந்து கொள்வோம்.
மலைப்பிரதேசம்
மலைப்பிரதேசம்Twitter
Published on

ஆங்கிலேயர்கள் கோடைக்கால ஓய்வுக்காலங்களில் பல நகரங்களையும், சிறு குக்கிராமங்களையும், மலைவாசஸ்தலங்களையும், சமவெளிகளையும் வெப்பத்தைத் தணிப்பதற்காகவே உருவாக்கி வைத்திருந்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம். அப்படி ஆங்கிலேயர்களால் புகழ் பெற்ற அந்த அழகிய மலைவாசஸ்தலங்கள் எவை எவை என்பதை இங்கே அறிந்து கொள்வோம்.

டார்ஜிலிங்
டார்ஜிலிங்Canva

1. டார்ஜிலிங்

19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது தான் டார்ஜிலிங். இன்று, நகரங்களின் இரைச்சலிலும், நெரிசலிலும் இருந்து விடுபட விரும்பும் மக்களுக்குப் பிரபலமான இடமாக உள்ளது. டார்ஜிலிங் ரயில் பாதை கட்டப்பட்ட பிறகு இந்த இடத்தின் வளர்ச்சியானது இருமடங்காகி, இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. இது யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தளமாகவும் விளங்குகிறது.

பச்மாரி
பச்மாரிCanva

2. பச்மாரி

19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பச்மாரியை ஆங்கிலேயர்கள் மத்திய மாகாணங்களுக்கான கோடைக்கால ஓய்வு இடமாக அமைத்தனர். இன்றுவரை, இந்த இடத்தில் கட்டுமானம் முற்றிலும் தடைசெய்யப்பட்டதன் காரணமாக, அந்த வசீகரத்தையும் பாரம்பரியத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஆங்கிலேயர் கால கட்டிடங்கள் இப்போது அழகான பாரம்பரிய ஹோட்டல்களாக மாற்றப்பட்டுள்ளன.

மாதேரன்
மாதேரன்Canva

3. மாதேரன்

மகாராஷ்டிராவில் உள்ள இந்த அழகிய மலைவாசஸ்தலம் ஆங்கிலேயர்களால் இதமான காலநிலையில் ஓய்வெடுக்கவும், சமவெளியின் வெப்பத்தை சமாளிக்கவும் உருவாக்கப்பட்டது. இந்த இடத்திற்கு வருபவர்கள் மலைவாசஸ்தலத்தைச் சுற்றி அழகான மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட பழைய ஆங்கிலேயர் கால கட்டிடக்கலையை கண்டுகளிப்பார்கள். இங்கு வரும்போது, 1907 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாத்தேரன் மலை ரயில் பாதையைத் தவறவிடாதீர்கள். இது யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட முக்கியமான சுற்றுலா தளமாகும்.

மலைப்பிரதேசம்
பூமிக்கு 1000 அடி ஆழத்தில் ஒரு புதிய காடு கண்டுபிடிப்பு - பிரபஞ்ச ரகசியத்தின் திறவுகோலா?
சிம்லா
சிம்லாCanva

4. சிம்லா

காலனித்துவ காலத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகளின் கோடைக்கால தலைநகராகச் சிம்லா விளங்கியது. 1815 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் இந்த பகுதியைக் கைப்பற்றினர். அதற்கு முன்பு இது ஒரு சாதாரண குக்கிராமமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேயர்கள் இங்குத் தேவாலயங்கள், பள்ளிகள் மற்றும் பங்களாக்களைக் கட்டினார்கள். மேலும், பிரிட்டிஷ் அரசாங்கம் கல்கா-சிம்லா ரயில் பாதையை உருவாக்கியது. இது இன்றுவரை மக்களுக்குச் சேவை செய்கிறது. மேலும், இமாச்சலப்பிரதேசத்தின் தலைநகரைச் சுற்றிலும் பரவியிருக்கும் காலனித்துவ கட்டிடக்கலை காரணமாகப் பார்வையாளர்களிடையே விரும்பப்படும் மலைவாசஸ்தலமாக்க விளங்குகிறது.

மலைப்பிரதேசம்
மணாலி முதல் ஸ்பிட்டி வரை : இமாச்சலில் சுற்றிப்பார்க்க வேண்டிய 10 மலை பிரதேசங்கள்
ஊட்டி
ஊட்டிCanva

5. ஊட்டி

முன்னதாக, இந்த இடம் ஒட்டகால் மண்டு என்ற பெயரால் அறியப்பட்டது, இது பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் உதகமண்டலத்திலிருந்து உதகமண்டாக மாற்றப்பட்டது. பின்னர் மக்கள் அதை மீண்டும் ஊட்டி என்று சுருக்கினர்.

கோடையின் கடுமையான வெப்பத்திலிருந்து தப்பிக்க ஊட்டிக்கு வருகை தந்த ஆங்கிலேயர்களுக்கு இந்த இடம் கோடைகால வாசஸ்தலமாக விளங்கியது. 1908 இல், ஆங்கிலேயர்கள் நீலகிரி மலை ரயில் நிலையத்தைக் கட்டினார்கள். இன்று, இந்த இடம் அதன் இனிமையான வானிலை காரணமாக தொலைதூரத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோரை ஈர்த்திருக்கிறது. அதே சமயம் ஏப்ரல் முதல் ஜூன் வரை மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை பார்வையிட சிறந்த காலமாகும்.

மலைப்பிரதேசம்
சம்மருக்கு யாரும் செல்லாத சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டுமா? அப்ப இதப்படிங்க பாஸ்
டேராடூன்
டேராடூன்Canva

6. டேராடூன்

1816-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் டார்ஜிலிங்கைக் கைப்பற்றுவதற்கு முன்பு, கர்வால் என்பவர் இந்த இடத்தின் ஆட்சியாளராக இருந்தார். ஆங்கிலேயர்கள் 1899-ம் ஆண்டு வாக்கில் இங்கு ஒரு ரயில் நிலையத்தை உருவாக்கினர். அதன் பிறகு இந்த இடம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக மாறியது. இங்குள்ள வன ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கலங்கா போர் நினைவுச்சின்னம் ஆகியவை காலனித்துவ காலத்துடன் தொடர்பு கொண்டுள்ளன.

மலைப்பிரதேசம்
Travel : இயற்கை எழில் கொஞ்சும் தமிழகத்தின் 5 சுற்றுலா தலங்கள் - இவற்றைத் தெரியுமா?
முசோரி
முசோரிCanva

7. முசோரி

தரவுகளின்படி 1825-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் முதன்முதலில் தங்குமிடத்தை அமைத்த முதல் மலைப்பகுதி இதுவாகும். முன்னதாக இங்கு 1814 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்களுக்கும் கோர்காக்களுக்கும் இடையே ஒரு போர் வெடித்தது. அப்போது கெம்ப்டி நீர்வீழ்ச்சி பிரிட்டிஷ் ஒருமுறை முசோரியில் வசம் இருந்தது. அதனால் முசோரியிலிருந்து இருந்து சாரதாவிற்குச் செல்லும் வழியெங்கும் பல முகாம்களைக் கட்டினார்கள். இன்று, அந்த இடம் ஒரு பிரபலமான விடுமுறை வாசஸ்தலமாக விளங்குகிறது.

மலைப்பிரதேசம்
அட்வென்சர் ஹனிமூன் செல்ல வேண்டுமா? இந்த காடுகளை ட்ரை பண்ணுங்க | Travel

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com