நமக்கு தினமும் பல்வேறு புதிய நம்பர்களில் இருந்து, சார் லோன் வேணுமா?, உங்களுக்கு கிரெடிட் கார்ட் வந்திருக்கு மேடம், பர்சனல் லோன் வேணுமா?" என்று அழைப்புகள் வரும்.
இவர்கள் வங்கிகளின் கஸ்டமர் கேர் துறையில் இருப்பவர்கள். இவர்களின் பணியே பொதுமக்களுக்கு அழைத்து மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களை விசாரித்து கடன் வாங்க வைப்பது தான். மாதத்திற்கு இவ்வளவு கஸ்டமர்களை பிடிக்க வேண்டும் என்ற டார்கெட் இருக்கும்.
சில சமயங்களில் பொதுமக்கள் இந்த ஊழியர்களை பிரான்க் கால்கள் செய்து கலாய்க்கும் சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது.
இது சம்பந்தப்பட்ட ஆடியோக்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வரும். அப்படி ஒரு ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த போன் காலில் பேசும் நபர் தான் ரயில் வாங்கவேண்டும் என்று கேட்டு ட்விஸ்ட் அடித்துள்ளார்!
பிரபல தனியார் வங்கியில் பணிபுரிகிறார் ஒரு பெண். அவர் ஒரு நபருக்கு அழைக்கிறார். தனது பெயர் நிஷா என்றும், தான் அந்த வங்கியில் வாடிக்கையாளர்களின் கடன் தேவைகளை கையாளும் துறையில் இருப்பதாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். உங்களுக்கு வீடு அல்லது தொழில், வாகன கடன் ஏதேனும் வேண்டுமா என்று கேட்கிறார் அந்த பெண்.
மறுபக்கம் பேசும் ஆண், "ஆமா மேடம் கடன் வேணும்" என்கிறார்.
என்ன கடன் வேண்டும் என்று வங்கி ஊழியர் கேட்க, கஸ்டமர் "நான் டிரெயின் வாங்கணும்" என்றார்.
ஸ்தம்பித்து போனார் வங்கி ஊழியர். ஒரு நிமிட அமைதிக்கு பிறகு அவர் "எவ்வளவு கடன் வேண்டும்" என்று கேட்க, அந்த நபரோ 300 கோடி ரூபாய் என்கிறார்.
மீண்டும் இதற்கு முன் ஏதாவது கடன் வாங்கியுள்ளீர்களா என்று அந்த பெண் கேட்க, ஆமாம் என்றார். தான் இதற்கு முன் சைக்கிள் ஒன்று வாங்கியுள்ளதாகவும் அதற்கு ரூ.1,600 லோன் பெற்றதாகவும் சொன்னார்.
இந்த ஆடியோ க்ளிப் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அந்த வங்கி ஊழியர் ஏன் அவரிடம் தன்மையாகவே பேசுகிறார், கடிந்துகொண்டிருக்கலாமே என்று கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
எனினும் இந்த ஆடியோ சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust