Man goes to court for not getting Rs 1 change back from BMTC bus, gets compensation Twitter
இந்தியா

1 ரூபாய் சில்லறை தராத நடத்துனர்: நீதிமன்றத்தை நாடிய நபருக்கு ரூ.2000 இழப்பீடு - எங்கே?

நீதிமன்ற உத்தரவின்படி, அந்த நடத்துனர் "அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் ரமேஷிடம் கத்தியதாகவும் கூறப்படுகிறது.

Priyadharshini R

2019 ஆம் ஆண்டில், ரமேஷ் நாயக் என்ற நபர் சாந்திநகரில் இருந்து பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திற்கு BMTC பேருந்தில் பயணம் செய்தார்.

அப்போது நடத்துனரிடம் 30 ரூபாய் கொடுத்து 29 ரூபாய்க்கு டிக்கெட்டை வழங்கியிருக்கிறார்.

மீதி சில்லறையான 1 ரூபாயை நடத்துனர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

Court

இதனால் ரமேஷ், 15,000 ரூபாய் இழப்பீடு கேட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்போது அந்த நபருக்கு ரூ.2,000 இழப்பீடு வழங்க பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகத்திற்கு (பிஎம்டிசி) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த நடத்துனர் "அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் ரமேஷிடம் கத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் BTCTCயின் உயர் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, ​​பயணியின் 1 ரூபாய் சில்லறையை கொடுக்காமல் தகராறு செய்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனையடுத்து நுகர்வோர் நீதிமன்றத்தை நாடிய ரமேஷுக்கு ரூ.2,000 இழப்பீடு வழங்க பிஎம்டிசிக்கு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?