Saman Ali Sarkar and his family  Twitter
இந்தியா

லுங்கி அணிந்ததால் படம்பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதா? - தியேட்டர் நிர்வாகம் விளக்கம்

Priyadharshini R

பங்களாதேஷின் முன்னணி மல்டிபிளக்ஸ் ஒன்றில் இருக்கும் ஸ்டார் சினிப்ளெக்ஸில் படம் பார்க்க வந்த முதியவர் லுங்கி அணிந்து வந்ததால் சினிமா டிக்கெட் மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமன் அலி சர்க்கார் என்ற முதியவர் ஸ்டார் சினிப்ளெக்ஸ் தியேட்டருக்கு "போரன்" என்கிற படத்தைப் பார்க்கச் சென்றதாகவும், ஆனால் டிக்கெட் மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வீடியோ சமூகவலைதங்களில் வைரலாக பரவியதை அடுத்து, தியேட்டர் நிர்வாகம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சினிப்ளெக்ஸ் தனது அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் வாடிக்கையாளர்களிடம் எதன் அடிப்படையிலும் பாகுபாடு காட்டுவதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

"ஸ்டார் சினிப்ளெக்ஸ் ஒரு நபரின் உடையின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டாது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

லுங்கி அணிந்திருப்பதால், ஒருவருக்கு டிக்கெட் வாங்குவதற்கான உரிமையை மறுக்கும் கொள்கைகள் எங்கள் நிறுவனத்தில் இல்லை. எங்கள் திரையரங்குகளில் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்களை பார்த்து ரசிக்க அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள் என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்" என்று ஸ்டார் சினிப்ளெக்ஸ் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

திரையரங்கம் சார்பாக, சமன் அலி சர்க்கார் மற்றும் அவரது குடும்பத்தினரை அதே மல்டிப்ளெக்ஸில் படம் பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை சினிப்ளெக்ஸ் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?