Wedding  Pexels
இந்தியா

மனைவியின் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்துகொண்ட நபர் - எங்கே?

Keerthanaa R

மனைவியின் சம்மதத்துடன் திருநங்கையை மணந்துள்ளார் ஒடிஷாவை சேர்ந்த நபர் ஒருவர்.

எல்லா பாலினத்தவருக்கும், உயிரினங்களுக்கும் காதல் என்பது ஒன்று தான்.  திருமணம் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களுக்கானது அல்ல என்ற நம்பிக்கைகள் சில வருடங்களாக உடைக்கப்பட்டு வருகின்றன...

உலக நாடுகளில் எல்லா பாலினத்தவர்களையும் அங்கீகரிக்கும் வகையில் LGBTQ+ என்ற கேம்பெயின்களும் நடக்கிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் LGBTQ+ வை கொண்டாடும் மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவிலும்  ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றமில்லை என அறிவிக்கப்பட்டது

இந்நிலையில், ஒடிஷாவில் காலாஹண்டி என்ற இடத்தில் ஒருவர், தான் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த திருநங்கையை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, இரண்டு வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனால் இவர்களது திருமணத்தை நடத்தி வைத்ததே அவரது மனைவி தான். 

கடந்த ஒரு வருடமாக தன் கணவர் அந்த திருநங்கையை காதலித்து வருவதாகவும், ஆனால் அவர் அதை தன்னிடம் கூற முடியாமல் ரகசியம் காத்து வந்ததாகவும் மனைவி தெரிவித்தார். முதலில் இதை புரிந்து ஏற்றுக்கொள்ளக் கஷ்டமாக இருந்தாலும்,  கணவர் திருநங்கை மேல் கொண்ட காதல் தன் மனதை மாற்றியது எனக் கூறினார். 

Wedding

இதனால், அந்த திருநங்கையிடம் அணுகி, அவரது சமூகத்தினரிடமும் பேசி, திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார். கிராம தலைவர் காமினி தலைமை தாங்கி, நார்லா என்ற இடத்தில் உள்ள ஒரு கோவிலில் இவர்களது திருமணம் நடந்தது. 

காமினி கூறுகையில், "இந்த திருமணத்திற்கு இவர்கள் நிச்சயம் தயாராக இருக்கிறார்களா என எங்கள் தரப்பிலும், திருநங்கை சமூகத்தின் தரப்பிலும் சம்மதம் கேட்கப்பட்டது. மேலும், காவல் துறையினரிடமும், இது குறித்த தகவலை நாங்கள் முன்கூட்டியே தெரிவித்துவிட்டோம்." 

Indian wedding (rep)

ஆனால், சம்மந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து ஏதேனும் பிரச்னை இருந்து அவர்கள் புகார் அளித்தால், அப்போது நாங்கள் சட்ட ரீதியாக இதில் தலையிடுவோம் என காவல் துறையினர் கூறியதாக காமினி கூறினார். 

இந்து முறைப்படி, முன்பே திருமணமான ஒருவர், சட்டரீதியாக தன் இணையை பிரிந்தால் மட்டுமே இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடியும். அதனால், இவர்களது திருமணம் சட்டப்படி செல்லுமா என்பது சந்தேகம் தான். 

ஆனால், மனைவியின் சம்மதத்துடன் கல்யாணம் செய்துகொண்டதால், பிரச்னை எதுவும் இல்லை என சம்மந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர். நேற்று திருமணம் நடந்த நிலையில், இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தான் வாழப்போவதாக மனைவி தெரிவித்துள்ளார். 

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?