Car submerges in sea (rep) Pexels
இந்தியா

சாகசம் செய்ய முயற்சித்து கடலுக்குள் காரை விட்ட நபர் - வைரல் வீடியோ

கோவா கடற்கரையில் காரை ஓட்டி அதை கடலுக்குள் விட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. கார் கடலுக்குள் முழுகாமல் அதை கரையேற்றுவதற்காக காரில் பயணித்தவர்கள் முயற்சித்த சம்பவம் இணைய வாசிகளிடையே பேசு பொருளாகியுள்ளது.

Keerthanaa R

ரோட்டில் வாகனங்களை ஓட்டும்போதே, பார்த்து பார்த்து ஓட்ட வேண்டியுள்ளது. அப்படியும், எங்காவது போய் முட்டிக்கொள்வதோ, அல்லது வேறு யாராவது நம் மீது வந்து மோதுவதோ எதிர்பாராத விதமாக நடக்கத் தான் செய்கிறது.


இப்படியிருக்கையில், கோவா அஞ்சுனா கடற்கரையில் டெல்லியைச் சேர்ந்த லலித் குமார் தயாள் என்பவர் தாறுமாறாக காரை ஓட்டி, கடலில் கார் சிக்கிக்கொண்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

அவர் ஓட்டிவந்தது ஹூண்டாய் க்ரெடா SUV. தில்லியை சேர்ந்த இவரும் இவரது நண்பரும் சேர்ந்து விளையாட்டாக கடற்கரையில் காரை ஓட்டி சாகசம் காட்ட, அது எதிர்பாராத விதமாக சற்று ஆழமுள்ள பகுதியில் சென்று சிக்கிக்கொண்டது. வாகனம் கடலுக்குள் முழுகாமல் பிடித்து இழுத்தபடியே உதவிக்கு அழைக்கும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

கடற்கரையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்ற விதிமுறை கடல் வாழ் உயிரினங்களின் நலன் கருதி பின்பற்றப்படும். ஒரு சில கடற்கரைகளில், காலநிலைக்கு ஏற்றவாறு, குறிப்பிட்ட நாட்களில் வாகனம் ஓட்ட அனுமதி இருக்கும்.

ஆனால் இதையும் மீறி இவர் காரை ஓட்டியதால், காரை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், காரை ஓட்டிய லலித் குமார் தயாள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் காரின் உரிமையாளர் சங்கீதா கவடல்கருக்கும் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் துணை காவல் கண்காணிப்பாளர் ஜிவ்பா தல்வி. அஞ்சுனா காவல் ஆய்வாளர் விக்ரம் நாயக் சம்பவம் குறித்த விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.


இதற்கு முன்னர் லடாக்கில், ஹண்டர் நுப்ரா பாலைவனத்தில் உள்ளூர் கட்டுப்பாடுகளை மீறி ஜெய்பூரை சேர்ந்த ஒரு தம்பதி டொயோட்டா ஃபார்ச்யுனர் காரை ஓட்டிசென்றனர். இவர்களது வாகனமும் பாலைவன மணலில் சிக்கிக்கொண்டது. இவர்களுக்கு லே லடாக் காவல்துறை ரூ.50,000 அபராதம் விதித்திருந்தது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?