புர்கா Twitter
இந்தியா

"ரகசியமானது காதல்" காதலியை பார்க்க புர்கா அணிந்து சென்ற காதலன் கைது - ஒரு கலாட்டா சம்பவம்

Antony Ajay R

உத்தர பிரதேசத்தில் தனது காதலியைப் பார்க்க புர்கா அணிந்து சென்ற காதலனை அடையாளங்களை மறைத்ததாக கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.

காதலிக்கும் நாட்களில் காதலர்கள் சந்தித்துக்கொள்ள பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்வது மனித நாகரீகம் தோன்றியது முதலே நடந்துவருவதாகும்.

அப்படியாக தனது காதலியை ரகசியமாக பார்க்க புர்கா அணிந்து சென்ற காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அடையாளங்களை மறைத்தல், அமைதிக்கு தொந்தரவு ஏற்படுத்துதல் போன்ற குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

கைது

அலி என்ற 25 வயது இளைஞர் மெஹமத்பூர் என்ற பகுதியில் உள்ள தனது காதலியைப் பார்க்க விரும்பியிருக்கிறார். அந்த பகுதியில் அனைவருக்கும் அலியைத் தெரியும் என்பதால், புர்கா அணிந்து சென்றுள்ளார். "இரகசியமானது காதல்" அல்லவா?

"புர்கா அணிந்த தன்னை யாரும் கண்டுபிடிக்க முடியாது என எண்ணிய அலி அவரது காதலியை சந்திக்க போனார்" என்று காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் பாஜ்பாய் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

புர்கா அணிந்து சென்ற அலி மீது அங்குள்ள மக்கள் சந்தேகப்பட்டு அதனை நீக்கும் படி கூறியிருக்கின்றனர்.

புர்கா அணிந்திருப்பது ஒரு ஆண் என்று கண்டறிந்த ஊர் மக்கள் காவல்துறையினரை அழைத்துள்ளனர்.

ஊர்மக்கள் புகார் அடிப்படையில் அலி மீது காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அலி 4 ஆண்டுகளாக அந்த பெண்ணை காதலித்து வருவது தெரிய வந்திருக்கிறது. அக்கம் பக்கத்தினர் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக அவரது காதலி தான் அலியை புர்கா அணிந்து வரக் கூறியதாகவும் காவல் துறையினர் ஊடகங்களிடம் விவரித்திருக்கின்றனர்.

போக்கிரி படத்தில் வரும் வடிவேலு மாதிரி புர்கா அணிந்தும் மாட்டிக்கொண்டுள்ளார் காதலர். இந்த புர்கா அணிந்து வரும் பழைய சினிமா ஐடியாவைக் கொடுத்த காதலி யாருப்பா? என தான் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?