"இவரது நேர்மை வியக்க வைக்கிறது" - மனதை நெகிழவைத்த 201 ரூபாய்! Twitter
இந்தியா

"இவரது நேர்மை வியக்க வைக்கிறது" - மனதை நெகிழவைத்த 201 ரூபாய்!

Antony Ajay R

கமல் சிங் என்ற நபருக்கு யுபிஐ செயலி ஒன்றில் 201 ரூபாய் முன்பின் தெரியாத நபர் ஒருவர் அனுப்பியுள்ளார். இதனால் ஆச்சரியமடைந்த அவர், யாரிடம் இருந்து வந்திருக்கிறது எனப் பார்க்கும் போது அவர் மனம் நெகிழ்ந்துள்ளார்.

உதவி செய்யும் குணமென்பது இந்த காலத்தில் பலரிடமும் இல்லாத ஒன்று. கையிலிருந்து ஒரு ரூபாய் சக மனிதருக்கு கொடுக்க கூட அத்தனை சிந்திக்கின்றனர். ஆனால் நீங்கள் செய்யும் ஒரு உதவி உங்களுக்கும் மற்றவர்களுக்கும் எந்த அளவு 'பாசிடிவ் வைப்' கொடுக்கும் என்பதற்கு இந்த பதிவு சாட்சி.

கமல் சிங் கடந்த ஆண்டு தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவை பார்த்துள்ளார். பண உதவி கேட்டு போடப்பட்டிருந்த அந்த பதிவருக்கு தன்னால் இயன்ற 201 ரூபாய் அனுப்பி உதவியுள்ளார்.

பொதுவாக இந்த மாதிரி உதவி கேட்கும் பதிவுகள் பொய்யாகவும் இருக்கலாம் என பலரும் கடந்து சென்று விடுவர். ஆனால் சிலர் செய்யும் தவறினால் உண்மையில் உதவி தேவைப்படும் பலருக்கு உதவி கிடைக்காமல் போகிறது. கமல் சிங் அந்த பதிவருக்கு உதவி செய்துள்ளார்.

உதவியைப் பெற்றுக்கொண்ட அவர் அதோடு சென்றுவிடாமல் ஒன்றை ஆண்டுகள் கழித்து அந்த தொகையை திருப்பி அனுப்பியுள்ளார்.

இதனால் நெகிழ்ந்த கமல் சிங் அந்த பண பரிமாற்றத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது லின்க்ட் இன் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவரது அம்மாவின் உடல் நிலைக் குறித்தும் விசாரித்துள்ளார்.

"Money Minded மக்கள் அதிகம் இருக்கும் சூழலில் இவரது நேர்மை என்னை வியக்க வைத்தது" என இந்த நிகழ்வைப் பகிர்ந்திருக்கிறார் கமல் சிங்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?