தனது இரட்டை சகோதரரை 36 ஆண்டுகளாக வயிற்றில் சுமந்துள்ளார் நாக்பூரை சேர்ந்த சஞ்சய் பகத் என்பவர்.
ஒரு கரு உருவாகும்போது, அது சமயத்தில் இரண்டாகவோ, அல்லது மூன்று நான்காக பிரிந்து இரட்டை குழந்தைகளாக உருவாகும். மூன்று குழந்தைகள் வரை உருவாவதே அரிதாக இருக்கும்போது, நான்கு முதல் 7, 9 குழந்தைகள் பிறந்த கதைகள் எல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
இதுவே மருத்துவத் துறையில் அரிதான நிகழ்வுகளாக இருக்கும்போது, மற்றொரு அரிதிலும் அரிதான நிகழ்வும் நடக்க சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
இரட்டை கருக்கள் உருவாகி, ஒரு கருவுக்குள் இன்னொரு கரு சென்று விடுவதை மருத்துவ ரீதியாக fetus in fetu (FIF) என்று அழைக்கின்றனர். இது முன்னரே குறிப்பிட்டதுபோல ஒரு அரிதான முரண்பாடு.
நாக்பூரைச் சேர்ந்தவர் சஞ்சய் பகத். சிறுவயது முதல் வயிறு சற்றே பூசினார் போல இருந்தபோதிலும் இவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தான் இருந்தார். இவருக்கு 20 வயது இருக்கும்போது இவரது வயிறு பெரிதாக ஆரம்பித்தது.
பார்ப்பதற்கு கர்ப்பமாக இருப்பதுபோல காட்சியளித்ததால், இவரை “the pregnant man" என்று இவரை அழைக்கத் தொடங்கினர்.
அப்போது 1999ல் ஒரு நாள் இவருக்கு வயிறு இன்னும் பெரிதாகி மூச்சு விட முடியாமல் போனது. இதனை தொடர்ந்து மருத்துவரை சஞ்சய் அணுகினார்.
சஞ்சயை பரிசோதித்த மருத்துவர்கள் முதலில் அதனை கட்டி என்று நினைத்தனர். இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது தான் அதிர்ச்சி காத்திருந்ததது.
ஹிஸ்டரி டிஃபைண்டின் அறிக்கையின் படி மருத்துவர்கள் கூறியதாவது, “அவர் தன் கையை உள்ளே விட்டு பார்த்தபோது முதலில் கைகளில் நிறைய எலும்புகள் தட்டுப்பட்டதாக கூறினார் சஞ்சய். அதன் பிறகு கை கால்கள், தலை மயிர், பிறப்புறுப்பு என உடற்பாகங்கள் கிடைத்தன.
நாங்கள் அதிர்ந்துபோனோம். இது எங்களை குழப்பமடைய செய்தது, அதே சமயத்தில் ஆச்சரியமாகவும் இருந்தது” என்றனர்.
அதன் பிறகு இது குறித்து விளக்கமளித்த மருத்துவர்கள் சஞ்சய்க்கு இருந்தது fetus in fetu நிலை என்று கூறினர். அதன்பிறகு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அந்த கரு அகற்றப்பட்டது.
கிட்ட தட்ட 36 ஆண்டுகளாக சஞ்சய் தனக்குள் தனது இரட்டை சகோதரரை சுமந்து வாழ்ந்துள்ளார். இந்த செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust