மணிகரன்: நினைத்ததை நிறைவேற்றும் வெந்நீரூற்றுகள் - எங்கே இருக்கிறது? இதன் பின்கதை என்ன? twitter
இந்தியா

மணிகரன்: நினைத்ததை நிறைவேற்றும் வெந்நீரூற்றுகள் - எங்கே இருக்கிறது? இதன் பின்கதை என்ன?

Keerthanaa R

இந்தியா பல கலாச்சாரங்களை உள்ளடிக்கிய நாடு என்பதால், இங்கு மதங்கள் ஒரு பெரும் பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு மதத்தை போற்றும் வகையிலும் நினைவுச்சின்னங்கள், புனித தலங்கள் நிறைந்திருக்கிறது நம் நாட்டில்.

சுற்றுலா துறையின் வளர்ச்சி, இவற்றில் மறைந்திருக்கும் அல்லது மறக்கப்பட்டிருக்கும் தலங்களை நாம் கண்டுகொள்ள, நமது வரலாற்றினை அறிய பேருதவியாக இருந்து வருகிறது.

அந்த வகையில் மணிகரன் என்ற இடத்தை பற்றி நாம் தெரிந்துகொள்வதும் அவசியமாகிறது. இந்துக்கள், சீக்கியர்கள் இருவருக்கும் முக்கியமான தலமாக இருக்கும் இந்த மணிகரன் எங்கே இருக்கிறது?

குளிர் பிரதேசமான இமாச்சல பிரதேசத்தில் இருக்கிறது பார்வதி பள்ளத்தாக்கு. இந்த பார்வதி பள்ளத்தாக்கில் தான் அமைந்திருக்கிறது மணிகரன் என்ற இடம். இதனை பார்வதி பள்ளத்தாக்கில் இருக்கும் பொக்கிஷங்களில் ஒன்று எனக் கூறுகின்றனர்.

இந்த ரம்மியமான உயரமான நகரம் அதன் சூடான நீரூற்றுகள், மத முக்கியத்துவம் மற்றும் பிரமிக்க வைக்கும் இயற்கை அழகுக்கு பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளும் யாத்ரீகர்களும் இந்த நகரத்திற்கு வருகை தருவது மணிகரன் மலை மிகவும் விரும்பப்படும் இடமாகும் என்பதற்கான சான்றாகும்.

சீக்கிய முக்கியத்துவம்

குருதுவாரா மணிகரன் சாகிப் என்ற மத குருவின் பெயரால் இந்த மணிகரன் பகுதி அறியப்படுகிறது. இது சீக்கியர்களின் மிக முக்கியமான புனித தலங்களில் ஒன்றாகும்.

கதைகளின் படி, சீக்கிய மத குரு, குரு நாணக் மணிகரன் பகுதிக்கு அவரது சீடர் பாய் மர்தனா என்பவருடன் வந்திருந்தார். இவர்கள் அங்கு ஒரு லங்கார் எனப்படும் சமூக சமையலறை அமைக்கவிருந்தார்கள். இதற்காக குரு நாணக் அவரது சீடரை உணவுப்பொருட்கள் வாங்க அனுப்பிவைத்தார்.

ஊரில் இருந்த பலரும் தங்களிடம் இருந்த பொருட்களை தந்து உதவினர். இவை அனைத்தும் கிடைத்தாலும், உணவு சமைக்க அவர்களிடம் நெருப்பு இல்லை. அப்போது குரு நாணக், சீடர் மர்தனாவை ஒரு பெரும் பாரங்கல்லை அகற்றச் சொன்னார்.

அதனை அகற்றிய மாத்திரத்தில் சூடான நீரூற்று ஒன்று தோன்றியது. அந்த சூடான தண்ணீரில் சமைக்கபடாத சப்பாத்திகளை போட்டு வேகவைக்கச் சொன்னாராம் குரு நாணக்.

ஆனால், புவியீர்ப்பு விசையின் காரணமாக அந்த சப்பாத்தி மூழ்கி போனது. அப்போது மர்தனாவை கடவுளிடம் பிரார்த்தனை செய்து சப்பாத்தியை மிதக்க கேட்கச்சொன்னார்.

அப்படி நடந்தால் கடவுளின் பெயரால் தானம் செய்வோம் என்ற வாக்குறுதியும் கூறப்பட்டது.

அப்போது ஒரு அற்புதம் நடந்தது. சப்பாத்திகள் மீண்டும் தோன்றின, அவை அனைத்தும் சமைத்து சாப்பிடத் தயாராக இருந்தன.

அப்போதிருந்து, மணிகரனின் வெந்நீரூற்றுகள் சீக்கியர்களிடம் முக்கியத்துவம் பெற்றது. கடவுளின் பெயரால் யார் நன்கொடை அளித்தாலும் அவர்களின் தேவைகள் எப்போதும் பூர்த்தி செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.

இந்துக்களுக்கு ஏன் இந்த இடம் முக்கியத்துவம் பெற்றது?

ஒரு முறை சிவன் மற்றும் பார்வதி பிரம்மாண்ட மலைகளும் அடர்ந்த காடுகளும் நிறைந்த இடத்திற்கு வந்தனர். அதன் அழகில் மயங்கி அங்கேயே தங்குவதாக முடிவெடுத்தனர்.

அப்போது ஒரு நாள் பார்வதி தேவி அணிந்திருந்த மணி அங்கிருந்த நீரோடையில் விழுந்து தொலைந்தது. அதை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

அண்டமே சிவனின் கோவத்தினால் அல்லோல கல்லோலமானது. சேஷநாகத்திடம் (பாம்புகளின் கடவுள்) சிவனை அமைதிப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. நாகக்கடவுள் தண்ணீரினை சூடாக்கினார் எனவும், அந்த தண்ணீர் அந்த பகுதி முழுவதும் படர்ந்தது என்றும் கதைகள் கூறுகின்றன. தண்ணீர் அந்த பகுதியில் படர்ந்ததில் பார்வதியின் மணி கிடைத்தது. பார்வதி பள்ளத்தாக்கு என்ற பெயரும் வந்தது

இதனால் இந்துக்களுக்கு இந்த இடம் முக்கியத்தும் பெற்றதாக கருதப்படுகிறது

கதைகளை அப்புறப்படுத்தி பார்த்தால், நிச்சயமாக ஒரு விஷயம் இருக்கிறது. மணிகரனில் புவிவெப்ப செயல்பாடு உள்ளது, இதன் விளைவாக இயற்கை வெப்ப நீரூற்றுகள் உருவாகின்றன. உலகெங்கிலும் உள்ள சூடான நீரூற்றுகள் மருத்துவ குணங்கள் நிறைந்த சிகிச்சையாகக் கருதப்படுகின்றன.

இமாச்சலம் செல்வதென்றால் இங்கு சென்று நீங்களும் மக்களுக்கு தானதர்மங்கள் செய்யலாம். அப்படியே இந்த வெந்நீரூற்றில் நீராடி உங்கள் மனது உடல் இரண்டையும் ரிலாக்ஸ் செய்து, புத்துணர்ச்சி பெற்று வரலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?