PM modi  Twitter
இந்தியா

பிரதமரின் கூட்டத்தில் அலட்சியமாக அமர்ந்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் - பாஜக விமர்சனம்

Priyadharshini R

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா சூழ்நிலை குறித்து காணொலி காட்சி வாயிலாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அலட்சியமாக அமர்ந்திருந்ததாக பா.ஜ.க தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளது.

அந்த வீடியோவில் கைகளைத் தலைக்குப் பின்னால் வைத்தபடி கெஜ்ரிவால் அலட்சியமாக அமர்ந்திருப்பார்.

பா.ஜ.க. தகவல் தொழில்நுட்பத்துறைத் தலைவர் அமித் மாளவியா இந்த வீடியோவை பகிர்ந்து ஒழுங்கற்ற நடத்தையால் கெஜ்ரிவால் தொடர்ந்து தன்னைத்தானே தரம் தாழ்த்திக்கொண்டு வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பிரதமருடன், மாநில முதல்வர்கள் கலந்துக்கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் இப்படி தான் நடந்துகொள்வாரா? அவருக்கு போரடித்துவிட்டதா அல்லது நடத்தை ஒழுங்கில்லையா? என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனாவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி பா.ஜ.க. ஊடகப்பிரிவு தலைவர் நவீன்குமார் ஜிண்டால், ‘இந்த மனிதருக்கு, பிரதமருக்கு முன்னால் எப்படி அமருவது என்று கூடத்தெரியவில்லை’ எனச் சாடியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?