இந்தியாவில் கடைசி சமஸ்கிருத கிராமம் : மொழியை காப்பாற்றும் மக்களின் கதை! Twitter
இந்தியா

இந்தியாவில் கடைசி சமஸ்கிருத கிராமம் : மொழியை காப்பாற்றும் மக்களின் கதை!

நவீன காலத்திலும் சமஸ்கிருதம் போன்ற பழமையான மொழியை பாதுகாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

Antony Ajay R

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் இருந்த இந்தியாவில் இன்று பல வட்டார மொழிகள் அழிந்துவிட்டன. பல மொழிகள் தங்களை காத்துக்கொள்ள, அங்கீகாரமின்றி தத்தளித்து வருகின்றன.

இந்தி, ஆங்கிலம் போன்ற பெரிய மொழிகளால் சிறிய மொழிகள் சிதைந்து வருகின்றன. இந்த நிலையிலும் ஒரே ஒரு கிராமத்து மக்கள் மட்டும் தொடர்ந்து பண்டைய மொழியான சமஸ்கிருதத்தைப் பேசி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்தில் தான் மாத்தூர் என்ற அந்த கிராமம் உள்ளது. இந்த நவீன காலத்திலும் சமஸ்கிருதம் போன்ற பழமையான மொழியை பாதுகாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. 

மாத்தூரில் உள்ள சான்ஸ்கர் பாரதி என்ற சமஸ்கிருத பள்ளி தான் இந்த நிலைக்கு காரணம். இங்குள்ள குழந்தைகள் 10 வயதிலேயே வேதங்களை படிக்கத் தொடங்கிவிடுகின்றனர். 

குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒவ்வொருவரும் சமஸ்கிருதத்தை வழக்கமாக பேச பயின்றுள்ளனர். 

இந்த கிராமத்துக்கு சென்றால், காதம் அஸ்தி (எப்படி இருக்கிறாய்?), ஆஹம் கச்சாமி (நான் போகிறேன்) மற்றும் ஷுபம் பவது (எல்லாம் நல்லதாக நடக்கட்டும்) போன்ற சமஸ்கிருத சொற்றொடர்கள் கேட்டபடி இருக்கும்.

இங்கு எல்லாரும் எப்போது சமஸ்கிருதத்தில் பேசிக்கொண்டிருப்பதில்லை. ஆனால், நாட்டிலேயே எளிமையாக இங்கு தான் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள முடியும். 

சமஸ்கிருதம் ஒலிக்காத ஜில்லாக்களே இந்தியாவில் இல்லை எனலாம். ஆனால் சமஸ்கிருதம் மக்களின் மொழியாக பேச்சுமொழியாக இருப்பது மிகவும் குறைவே. 

சமஸ்கிருதத்தை மக்களுக்கு பயிற்றுவிக்கும் விதமாக சிபிஎஸ்சி-யில் 3வது மொழிப்பாடமாக சமஸ்கிருதத்தைச் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?