Harsh Goenka Twitter
இந்தியா

"சந்தோஷமாக இல்லை, வேலையை விடுகிறேன்"- வைரலாகும் RPG குழுமத்துக்கு வந்த ராஜினாமா கடிதம்

ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயிங்காவுக்கு அவரது நிறுவனத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் தன் கைப்பட எழுதி அனுப்பியுள்ள ராஜினாமா கடிதம்"பை பை சார்" கடித்தத்தை போலவே வைரலாகி வருகிறது.

Keerthanaa R

கடந்த சில தினங்களாகவே வித்தியாசமாக, அதே நேரத்தில் மனதில் தோன்றியதை வெளிப்படையாக கூறி வேலையை ராஜினாமா செய்பவர்களின் கடிதங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த ராஜினாமா கடிதங்களை அனுப்பும் பணியாளர்களின் நேர்மையைப் பாராட்டி மேலதிகாரிகள் அதை ஏற்றுக்கொண்டும் வருகின்றனர். இந்த கடிதங்களை படிக்கும்போது நமக்கு என்னதான் சிரிப்பு வந்தாலும், கிட்ட தட்ட நாமும் அதே மனநிலையில் தான் இருப்போம், அல்லது சில தினங்களில் அந்த மனநிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம்.


அந்த வகையில், ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயிங்காவுக்கு அவரது நிறுவனத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் தன் கைப்பட எழுதி அனுப்பியுள்ள ராஜினாமா கடிதம்"பை பை சார்" கடித்தத்தை போலவே வைரலாகி வருகிறது.

Resignation Letter

ராஜேஷ் என்ற அந்த நபர்,

"டியர் ஹர்ஷ்,

நான் வேலையை ராஜினாமா செய்கிறேன். எனக்கு சந்தொஷமாக இல்லை"

என்று எழுதி இப்படிக்கு ராஜேஷ் என்று தன் பெயரையும் குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்.


இதை தனது LinkedIn பக்கத்தில் பகிர்ந்த ஹர்ஷ் கோயிங்கா, "இந்த கடிதம் சிறியதாக இருந்தாலும் ஆழமானது. இது நாம் சரி செய்ய வேண்டிய ஒரு முக்கிய பிரச்னை" என்று தலைப்பிட்டுப் பகிர்ந்திருந்தார்.

Bye Bye Sir- Resignation Letter

கமென்ட் செக்ஷனில் ஒன்றுகூடிய பயனாளர்கள் ஒரு புறம் இந்த கடிதம் முறையான விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டிவர, மற்றவர்களோ, "இது தான் நிறைய பணியாளர்களின் மனநிலை. ஆனால் எல்லோராலும் வெளிப்படையாக சொல்ல முடியாது." என்று கூறினர்.


இதை 'most genuine resignation letter' என்று குறிப்பிட்ட இணைய வாசிகள், தங்கள் செய்யும் வேலைகளில் பலருக்கு திருப்தியும் சந்தோஷமும் இருப்பதில்லை என்பதன் தீவிரத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கான மூல காரணத்தை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

இதை போலவே வெறும் "பை பை சார்" என்று மூன்றே வார்த்தைகளில் ஒருவர் தன் ராஜினாமா கடிதத்தை எழுதியிருந்தது இணையதளத்தில் வைரலானது.


இந்நிலையில், இது போன்ற வாக்கியங்களுடன் அடுத்தடுத்து எழுதப்பட்டும் ராஜினாமா கடிதங்கள் அதிகரித்துள்ளது, பெரு நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


நீங்கள் வேலையை ராஜினாமா செய்வதென்றால் என்ன சொல்லி விடைபெறுவீர்கள்?

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?