B.Com graduate who sells idli Twitter
இந்தியா

"McDonald's வேலை வேண்டாம்" : தெருவோரங்களில் இட்லி விற்கும் பி.காம் பட்டதாரி | Video

Priyadharshini R

மோட்டார் சைக்கிளில் இட்லி கடை நடத்தி வரும் பி.காம் பட்டதாரியான அவினாஷின் வீடியோவை பகிர்ந்து இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர். தெருவோரங்களில் மோட்டார் சைக்கிளில் இட்லி விற்கும் ஒருவரின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Swag Se Doctor, என்ற இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த கிளிப்பில் பி.காம் பட்டதாரி அவினாஷ் இட்லி-சாம்பார் ஸ்டாலைத் தொடங்கி நடத்தி வருவது இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோ 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகி வருகிறது.

பி.காம் பட்டதாரியான அவினாஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் இட்லி விற்பனை செய்து வருகிறார்.

பி.காம் இட்லி வாலே என்ற அவரது ஸ்டால் ஃபரிதாபாத்தில் அமைந்துள்ளது. இவர் 2019-ல் பி.காம் ஹானர்ஸில் பட்டப்படிப்பை முடித்தார்.

அவினாஷும் மெக்டொனால்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இருப்பினும் அவருக்கு மோட்டார் சைக்கிளில் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது.

அவினாஷ் கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாமல் இருந்ததால் உணவு கடை வைக்க முடிவு செய்தார். இதனால் மோட்டர் சைக்கிளில் இட்லி சாம்பார் விற்பனை செய்ய தொடங்கினார்.

இவரது மனைவி சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தென்னிந்திய உணவுகள் செய்யத் தெரியும். இதனை பயன்படுத்தி ஒரு இட்லி ஸ்டாலை தொடங்கினார் அவினாஷ்.

ஸ்டாலின் நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்குமாம். மற்றும் ஒரு தட்டு இட்லி-சாம்பார் விலை ரூ.20.

நெட்டிசன்கள் அவினாஷின் இந்த முயற்சியை பாராட்டி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?