சந்திரயான் 3: இட்லி விற்கும் இஸ்ரோ இஞ்சினியர் - அவல நிலைக்கு காரணம் என்ன? அரசு உதவுமா? twitter
இந்தியா

சந்திரயான் 3 : இட்லி விற்கும் இஸ்ரோ இஞ்சினியர் - அவல நிலைக்கு காரணம் என்ன? அரசு உதவுமா?

முதலில் தனது கிரேடிட் கார்டை வைத்து தன் வீட்டு செலவுகளை சமாளித்திருக்கிறார். பின்னர் உறவினர்களிடம் கடன் வாங்கியுள்ளார். மனைவியின் நகைகளும் அடகு கடைக்கு சென்றுவிட்டது.

Keerthanaa R

சந்திரயான் 3 விண்கலத்தை தயாரிக்கும் குழுவில் பணியாற்றிய தீபக் குமார் உப்ராரியா என்ற திட்ட பொறியாளர் தற்போது வாழ்வாதாரத்துக்காக இட்லி விற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சமீபத்தில் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி, வரலாற்று சாதனை படைத்தது.

இந்த சந்திரயான் 3 மிஷனில் ஏராளமானோர் பணியாற்றியுள்ளனர். என்னென்ன பதவிகள் திட்ட குழுவில் இருந்தன, அவர்களின் ஊதியம் என்ன, அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பது வரை அலசினோம்.

சந்திரயான் 3: இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பளம் என்ன தெரியுமா?

ஆனால், இதன் திட்டக் குழுவில் பணியாற்றிய பொறியாளர் ஒருவர், கடந்த 18 மாதங்களாக ஊதியம் பெறாததால், வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ள இட்லி விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அறிக்கைகளின் படி, தீபக் குமார் உப்ராரியா என்பவர் ஹெவி இஞ்சினியரிங் கார்ப்பரேஷன் லிமிட்டட் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.

மத்திய பொதுத்துறை நிறுவனமான எச் இ சி, இஸ்ரோவுடன் பல மிஷன்களில் பணியாற்றியுள்ளது.

தீபக் குமார் உப்ராரியா என்பவருக்கு இந்த நிறுவனம் கடந்த 18 மாதங்களாக ஊதியம் எதுவும் வழங்கவில்லை. தீபக் உட்பட இன்னும் சில பணியாளர்களுக்கும் 18 மாதங்களாக சம்பளமே வழங்கவில்லையாம்.

தீபக் குமார் சந்திரயான் திட்டத்திற்கு ஏவுதளம் அமைத்தவராவார்.

முதலில் தனது கிரேடிட் கார்டை வைத்து தன் வீட்டு செலவுகளை சமாளித்திருக்கிறார். பின்னர் உறவினர்களிடம் கடன் வாங்கியுள்ளார். மனைவியின் நகைகளும் அடகு கடைக்கு சென்றுவிட்டது.

சம்பளம் வந்துவிடும் என்று நம்பியிருந்தார். ஆனால் கடன் கழுத்தை நெறிக்க தொடங்கியது தான் மிச்சம்.

"முதலில் நான் கிரெடிட் கார்டு மூலம் எனது குடும்பத்தை நிர்வகித்தேன். அதில் எனக்கு ரூ.2 லட்சம் கடன் ஏற்பட்டது, நான் கடன் செலுத்தாதவனாக அறிவிக்கப்பட்டேன். அதன்பிறகு, உறவினர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு எனது குடும்பத்தை நடத்த ஆரம்பித்தேன்"

சுமார் 4 லட்சத்திற்கும் மேலாக தற்போது கடன் சேர்ந்துவிட்டதாக கூறும் தீபக் குமார், வேறு வழியின்றி சொந்தமாக இட்லி கடை ஒன்றை ஆரம்பித்தார்.

”பசியால் வாடி உயிர் போய்விடும் என்ற தருணத்தில் தான், இட்லி விற்க முடிவு செய்தேன். எனது மனைவி நன்றாக சமைப்பார். ஒரு நாளைக்கு ரூ. 300 முதல் 400க்கு இட்லி விற்கிறேன். எனக்கு அதில் 50 ரூபாய் கிடைக்கும்”

மத்திய பிரதேசத்தை சேர்ந்த இந்த பொறியாளர், எச் இ சியில், 8000 ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்ந்தார். தீபக் குமார் உட்பட இன்னும் பல ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக நிறுவனம் ஊதியம் வழங்கவில்லை.

இதனால் தேநீர், மோமோஸ் விற்பது என தங்களால் முடிந்த தொழில்களை செய்து பிழைத்து வருகின்றனர் ஊழியர்கள்.

இவர்களின் அவலம் நிறுவன பெரியோர்களின் காதுகளை எட்டுமா? அல்லது அரசாங்கமாவது இவர்களின் நிலை காக்க முன்வருமா என்பதை காத்திருந்து தான் பார்க்கவேண்டும்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?